Expert

PCOS Treatment: PCOS பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்கள்!

  • SHARE
  • FOLLOW
PCOS Treatment: PCOS பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்கள்!


How to Use Fenugreek Seeds for PCOS: ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, பெண்களுக்கு PCOS அல்லது பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (polycystic ovary syndrome) போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம். பிசிஓஎஸ் பிரச்சனையால் பெண்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, திடீர் எடை அதிகரிப்பு, ஹார்மோன் சமநிலையின்மை, மாதவிடாய் காலங்களில் பிரச்சனைகள் மற்றும் முகத்தில் தேவையற்ற முடி வளர்த்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

உடலில் அதிக ஆண்ட்ரோஜன்கள், இன்சுலின் எதிர்ப்பு, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவற்றால் பிசிஓஎஸ் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம். PCOS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதற்கான ஆபத்தும் அதிகம். பிசிஓஎஸ் நோயிலிருந்து விடுபட மக்கள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம் : PCOS Diet : PCOS பிரச்சனையைக் குறைக்க இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்கள்

ஆனால், சமையலறையில் இருக்கும் ஒரு சிறிய பொருள் உங்கள் PCOS பிரச்சினையை சரிசெய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சமையலறையில் காணப்படும் வெந்தயம் PCOS பிரச்சினைக்கு மிகவும் நல்லது. வெந்தய விதையில் உள்ள பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் PCOS தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

PCOS-க்கு வெந்தயம் எவ்வாறு நன்மை தரும்?

வெந்தயத்தில் போதுமான அளவு ஆற்றல், புரதம், நீர், கார்ப்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி, கொழுப்பு, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளது. இதில், உள்ள மருத்துவ குணங்கள் பிசிஓஎஸ் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர்.வி.டி.திரிபாதி கூறுகையில், ​​“வெந்தயம் உடலில் இன்சுலின் எதிர்ப்பை குணப்படுத்தும் பண்புகளையும் கூறுகளையும் கொண்டுள்ளது. PCOS தவிர, வெந்தயத்தின் பயன்பாடு கருப்பை நீர்க்கட்டி சிகிச்சைக்கு மிகவும் நன்மை பயக்கும்".

இந்த பதிவும் உதவலாம் : Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

வெந்தய தண்ணீர் மற்றும் அதன் விதைகளை உட்கொள்வதன் மூலம் PCOS இன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். இது தவிர, வெந்தய விதைகளின் பல மருத்துவப் பயன்பாடுகள் ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை, PCOS பிரச்சனையைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும். வெந்தய விதையில் உள்ள பண்புகள் உடலில் லுடினைசிங் ஹார்மோன் மற்றும் நுண்ணறை தூண்டும் ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. PCOS பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

  1. வெந்தயத்தில் உள்ள பண்புகள் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பை குணப்படுத்த உதவுகிறது. இது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
  2. வெந்தயம் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எடை அதிகரிப்பு பிரச்சனை PCOS இல் மிகவும் பொதுவானது.
  3. வெந்தய விதைகளை உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இதனை உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.
  4. வெந்தய விதையில் உள்ள சபோனின் மற்றும் கூமரின் போன்ற கலவைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதில் மிகவும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : மாதவிடாய் காலங்களில் உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்

PCOS உள்ளவர்கள் வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டம்?

வெந்தயம் PCOS பிரச்சினைக்கு மிகவும் நல்லது. இருப்பினும், அதை உட்கொள்ளும் முன், வெந்தய விதைகளின் அளவு, திறன் மற்றும் உட்கொள்ளும் முறை பற்றி உங்கள் மருத்துவரிடம் விவாதிக்க வேண்டும். PCOS ஏற்பட்டால், வெந்தயத்தை மசாலாப் பொருளாக உட்கொள்ளலாம். இது தவிர, வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதை உட்கொள்ளவும். இல்லையெனில், வெந்தய விதை நீரை உட்கொள்வது PCOS பிரச்சனையில் பெரும் நிவாரணம் தரும்.

Pic Courtesy: Freepik

Read Next

Bra Benefits: பெண்கள் பிரா அணியாததால் இவ்வளவு ஆபத்து ஏற்படுமா?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version