Foods That Lower The Risk Of Diabetes And Alzheimer's: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாகும். அதன் படி, நார்ச்சத்துக்கள், புரதம், வைட்டமின்கள் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாகும். இவை அனைத்தும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இந்த ஆரோக்கியமான உணவுகளை எடுஹ்துக் கொள்வதன் மூலமே நமது தேவையற்ற மருத்துவ நிலைமைகளைத் தடுக்க முடியும்.
ஆனால், போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் அமைகிறது. இதில் மற்றொரு நோயாக மறதி நோயும் உண்டாகிறது. இவை இரண்டும் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருப்பினும், போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமையும் நீரிழிவு மற்றும் அல்சைமர் நோய்க்குக் காரணமாகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Salt Types and Benefits: உப்பில் இத்தனை வகை இருக்கா? இதுல எது பெஸ்ட் தெரியுமா?
அழற்சி எதிர்ப்பு உணவுகள்
சமீபத்திய ஆய்வின் படி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கவும் தினசரி நார்ச்சத்து சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. டிரிப்டோபன் என்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் பல்வேறு உணவுகளில் காணப்படுகிறது. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும் இது குடலில் பாக்டீரியாவால் பல்வேறு சேர்மங்களாக மாற்றப்படுகிறது. இது தவிர, ஏராளமான காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் மற்றும் சில பால் உணவுகள் அழற்சி எதிர்ப்பு உணவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த உணவுகள் நீரிழிவு, அல்சைமர் மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு தீவிர நோய்களைத் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு மற்றும் மறதி நோய்க்கு சாப்பிட வேண்டிய உணவுகள்
சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் நீரிழிவு மற்றும் மறதி நோய் இரண்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ் மற்றும் விதைகளில் கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. அதன் படி, ஒரு அவுன்ஸ் அளவிலான பாதாம் பருப்பில் சுமார் 4 கிராம் அளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தைவ்ர, நட்ஸ் மற்றும் விதைகளில் மக்னீசியம், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிகம் உள்ளது.
முழு தானியங்கள்
பொதுவாக முழு தானியங்கள் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்டு, அதனை அப்படியே விட்டுவிட்டு, வைட்டமின்-கொண்ட கிருமி மற்றும் நார்ச்சத்து நிறைந்த தவிடு ஆகியவற்றால் ஏற்றப்படும். உணவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் பாதி அளவையாவது முழு தானிய வகைகளான தினை, பார்லி போன்றவற்றுடன் மாற்ற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Diet: மழைக்காலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இங்கே.
புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள்
பல்வேறு காரணங்களுக்காக அதிகளவு காய்கறிகளை சாப்பிடுவது அவசியமாகும். இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிக்க காய்கறிகளை உட்கொள்வது தீவிர மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், காய்கறிகளில் குறைந்த அளவு கலோரிகள், அதிகளவிலான நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து அற்றதாகக் காணப்படுகிறது.
பெர்ரி
விதைகள் நிறைந்த பெர்ரி பழங்கள், மிகவும் அதிகளவிலான நார்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு கோப்பைக்கு 8 கிராம் என்ற அளவில் ராஸ்பெர்ரி அல்லது ப்ளாக்பெர்ரிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிகளவிலான நார்ச்சத்துக்களைப் பெற முடியும். இது தவிர, இந்த பெர்ரி பழங்கள் குறைந்த அளவிலான சர்க்கரையைக் கொண்டுள்ளது. அன்றாட உணவில் பெர்ரி பழங்களை சாலட் மற்றும் தானியங்கள் போன்றவற்றில் சேர்க்கப்படலாம்.
பருப்பு வகைகள்
உலர்ந்த பட்டாணி, பீன்ஸ் மற்றும் பயறு போன்ற பல்வேறு வகையான பருப்பு வகைகள் உணவுகளில் ஒரு முக்கிய பகுதியாகச் செயல்படுகிறது. இந்த பருப்பு வகைகளில் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், புரதம் மற்றும் தாதுக்கள், நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. வாரத்திற்கு ஒரு சில உணவுகளில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வது ஆயுட்காலத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும்.
இந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் நீரிழிவு மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coffee Before Workout: இவங்க மறந்தும் உடற்பயிற்சிக்கு முன் காபி குடிக்கக் கூடாது!
Image Source: Freepik