Pcos weight loss in 1 month diet plan: தவறான வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கத்தால் பெண்கள் அதிகமாக PCOS மற்றும் PCOD பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். PCOS பிரச்சினை உள்ள பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலை மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் காலத்தில் கடுமையான பிடிப்புகள் மற்றும் கருத்தரிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
PCOS பிரச்சினையின் போது பெண்களின் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன, இதன் காரணமாக அண்டவிடுப்பின் போது கருமுட்டை வெளியேற்றப்படாது. எனவே, PCOS உள்ள பெண்கள் கருத்தரிப்பதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதுதவிர மனநிலை மாற்றங்கள், எரிச்சல், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளும் காணப்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம் : Keto Diet In PCOS: PCOS-ஐ நிர்வகிக்க கீட்டோ டயட் உதவுவது எப்படி?
இதில் இருந்து விடுபட பெண்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால், பிசிஓஎஸ் பிரச்சினை உள்ளவர்கள் அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால், அது அவர்களின் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுமட்டும் அல்ல, ஹார்மோன் சமநிலையின்மையால் அதிகரிக்கும் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் இது உதவும்.
பிசிஓஎஸ் பிரச்சினை உள்ளவர்கள் அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டையை எப்படி உட்கொள்ள வேண்டும்? அதன் பயன்கள் என்ன என்பது குறித்த ஒரு வீடியோவை டயட்டீஷியன் ஷிகா குமாரி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பிசிஓஎஸ் உள்ள பெண்கள் தினமும் அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டை பொடி கலந்த தண்ணீரை உட்கொள்ளலாம். இது பல பிரச்சினைகளை தீர்க்கும் என கூறியுள்ளார். அவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : PCOS Treatment: PCOS பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்கள்!
PCOS பிரச்சினைக்கு அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டை நல்லதா?

அஸ்வகந்தா
அஸ்வகந்தா பல நூற்றாண்டுகளாக பல நோக்கலுக்கான மருந்தில் சேர்க்கப்படும் ஒரு மூலிகை பொருள். இது ஒரு அடாப்டோஜெனிக் மூலிகை. மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உடலுக்கு உதவும். மேலும், இது இன்சுலின் மற்றும் செக்ஸ் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவும்.
இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் மசாலா மற்றும் மூலிகை ஆகும். இது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் திறன் கொண்டது. PCOS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இது இன்சுலின் எதிர்ப்பு நிலையின் பொதுவான அம்சமாகும்.
இந்த பதிவும் உதவலாம் : PCOS Diet : PCOS பிரச்சனையைக் குறைக்க இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்கள்
PCOS-க்கான கசாயம் செய்வது எப்படி?
தேவையான பொருள்:
அஸ்வகந்தா தூள் - 1/2 ஸ்பூன்.
இலவங்கப்பட்டை பொடி - 1/2 ஸ்பூன்.
வெந்நீர் - 1 டம்ளர்.
செய்முறை:
ஒரு கப் வெந்நீரில் அஸ்வகந்தா தூள் மற்றும் இலவங்கப்பட்டையை கலக்கவும். அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டை நன்கு கரையும் வரை நன்றாக கலக்கவும். இதோ, PCOS-க்கான மூலிகை கசாயம் தயார்.
இந்த பதிவும் உதவலாம் : Signs Of PCOS: இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்காதீர்! இது pcos-ன் அறிகுறிகள்
குடிக்க சரியான நேரம் எது?

அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்க சிறந்த நேரம் காலை நேரம். இந்த அற்புதமான பானத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். இதை தொடர்ந்து 60 நாட்கள் குடித்து வர நல்ல மற்றம் தெரியும்.
Pic Courtesy: Freepik