Doctor Verified

Skin Condition During Periods: மாதவிடாய் சமயத்தில் சரும பிரச்சனையா? அதுக்கு இத செய்யுங்க.

  • SHARE
  • FOLLOW
Skin Condition During Periods: மாதவிடாய் சமயத்தில் சரும பிரச்சனையா? அதுக்கு இத செய்யுங்க.

மாதவிடாய் சுழற்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்

பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சி காலம் பொதுவாக 28 நாள்கள் ஆகும். எனினும், சில சமயங்களில் இந்த நாள்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இதில் நான்கு கட்டங்கள் உள்ளன. இந்த சுழற்சி முழுவதும் ஹார்மோனின் அளவை அதிகரிப்பு மற்றும் குறைவதாக அமையும். இதில் ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்டிரான் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்றவை அடங்கும். இதில், மாதவிடாய் சுழற்சியின் நான்கு நிலைகளைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Periods Back Pain: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலிக்கான காரணங்களும், அதன் அறிகுறிகளும்

மாதவிடாய் காலம்

இந்த கட்டத்தில் பெண்களின் கருப்பையில் உருவாகும் அடுக்கு, இரத்தப்போக்கு வடிவில் வெளியேறும். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவு மிகக் குறைவாக இருக்கும்.

ஃபோலிகுலர் நிலை

இது உடல் அண்டவிடுப்பிற்கு தயாராகும் நிலையாகும். இந்நிலையின் போது ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதால், அண்டவிடுப்பின் நுண்ணறைகள் முதிர்ச்சியடைகிறது.

அண்டவிடுப்பு நிலை

மாதவிடாய் சுழற்சியின் 14 ஆவது நாளில், ஈஸ்ட்ரோஜன் அளவு உச்சத்தை அடைகிறது. இது முதிர்ந்த முட்டையின் வெளியீட்டைத் தூண்டி, லூடினைசிங் ஹார்மோனை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Post Pregnancy Diet: தாய்மார்கள் சாப்பிட வேண்டிய கர்ப்பத்திற்குப் பிந்தைய உணவுகள்

லூட்டல் நிலை

அண்ட விடுப்பிற்கு பின் நுண்ணறை லுடியமாக மாறுகிறது. இவை புரோஜஸ்டிரோனை உற்பத்தி செய்கிறது. இந்த கட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரோன் அளவுகள் அதிகமாக இருக்கும்.

மேலே கூறப்பட்ட நிலைகளில் மாதவிடாய்க் காலத்தின் போது ஹார்மோன் அளவு குறைவதால், இவை சரும உற்பத்தியில் சரிவுக்கு வழிவகுக்கிறது. இதில், செபம் என்ற சருமத்தின் இயற்கையான எண்ணெய் குறைபாட்டை ஏற்படுத்தும். இவை நீரிழப்பு மற்றும் தோல் வறட்சியை உண்டாக்கலாம். கூடுதலாக, சில பெண்களுக்கு, இந்நேரத்தில் எரிச்சல், சிவத்தல் போன்றவை ஏற்படலாம். இன்னும் சிலருக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முகப்பருக்கள் தோன்றலாம்.

மாதவிடாய் சுழற்சியின் போது சரும பராமரிப்பு முறைகள்

முகப்பருவைக் குறைப்பது

பெண்கள் லுடீல் கட்டத்தில் அவர்கள் சில வீட்டு வைத்திய முறைகளைக் கையாண்டு முகப்பருவைக் குறைக்கலாம். இந்த கட்டத்தில் முகப்பரு அதிகமாக இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Endometriosis Pain Relief: கடுமையான இடுப்பு வலியால் அவதியா? இதெல்லாம் டிரை பண்ணுங்க.

மன அழுத்தத்தைக் குறைப்பது

தினமும் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைச் சரி செய்கிறது. இவை சருமத்தை மேம்படுத்துவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்கலாம்.

உணவில் மாற்றம்

மாதவிடாயின் போது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, பெண்கள் உணவு முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதன் படி, பழங்கள், காய்கறிகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் சருமத்தை பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சரும பிரச்சனைகளைக் குறைக்க முடியும். இந்த நேரத்தில் பெண்களுக்கு நீரிழப்பு பிரச்சனை உண்டாவதால், தோல் வறட்சியடையலாம். இதைத் தவிர்க்க, பெண்கள் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். மேலும், உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Gestational Diabetes Symptoms: கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கான காரணங்களும், அறிகுறிகளும் இங்கே.

Image Source: Freepik

Read Next

Vaginal Health: பெண் உறுப்பு ஹெல்தியா இருக்க இதை செய்யுங்க!

Disclaimer