Expert

Post Pregnancy Diet: தாய்மார்கள் சாப்பிட வேண்டிய கர்ப்பத்திற்குப் பிந்தைய உணவுகள்

  • SHARE
  • FOLLOW
Post Pregnancy Diet: தாய்மார்கள் சாப்பிட வேண்டிய கர்ப்பத்திற்குப் பிந்தைய உணவுகள்


Post Pregnancy Diet List: பெண்கள் கர்ப்பத்திற்குப் பிந்தைய சரியான உணவு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவு தாய் மற்றும் பிறக்காத குழந்தையையும் பாதுகாத்துக் கொள்வதற்கான ஆற்றலை வழங்குகிறது. பிரவத்திற்குப் பிந்தைய கட்டம் என்பது குழந்தை பிறகு தொடங்குவதாகும். மகப்பேறுக்குப் பிறகு பராமரிப்பு என்பது வலிமையை மீட்டெடுத்தல், போதுமான ஓய்வு பெறுவது, சரியான உணவை உட்கொள்வது போன்றவை அடங்கும். இந்தப் பதிவில் ஊட்டச்சத்து நிபுணரும், ஃபிட்னஸ் நிபுணருமான மனிஷா சோப்ரா அவர்கள் கர்ப்பத்திற்குப் பிந்தைய டயட் டிப்ஸ்களைத் தருகிறார்.

நிபுணர் மனிஷா சோப்ராவின் கருத்துப்படி, மகப்பேறுக்குப் பிறகான உணவு தாய்ப்பாலின் அளவு, தரம், மற்றும் சுவை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவதற்கான முக்கிய வழி தாய்ப்பாலூட்டுதல் ஆகும். எனவே, புதிய தாய்மார்கள் உணவை எடுத்துக் கொள்வதில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தையின் சரியான வளர்ச்சி, தாய்மார்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Hygiene: தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பக சுகாதாரத்தை எவ்வாறு பராமரிப்பது?

மகப்பேறுக்குப் பிறகு சாப்பிட வேண்டிய உணவுகள்

தாய்மார்களுக்கான சிறந்த மகப்பேறு உணவுகள், பிறக்காத குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்கவும், தாயின் உடலை நிரப்பவும் உதவுகிறது.

பழங்கள் மற்றும் கொட்டைகள்

பல்வேறு நார்ச்சத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவற்றின் நல்ல மூலமாக பழங்கள் உள்ளது. இவை நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துவதாகவும், முழுமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. பேரிக்காய், ஆப்பிள் போன்ற பழங்களில் பெக்டின் மற்றும் நார்ச்சத்து போன்றவை உள்ளது. இவை இயற்கையாகவே வளர்ச்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இது தவிர, ஆப்ரிகாட், பெர்ரி, பாகற்காய், முலாம்பழம், கொடி முந்திரி, திராட்சைப்பழம் போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

புரதம்

உடலுக்குத் தேவையான சத்துக்களில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள திசுக்கள், ஹார்மோன்கள், என்சைம்கள் போன்ற அனைத்தும் புரதங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதன் படி, சோயா பொருள்கள், முட்டை, மீன், பாலாடைக்கட்டி, கொண்டைக்கடலை, பருப்பு வகைகள், சோயா பொருள்கள், மட்டி, கோழி, ஒல்லியான இறைச்சிகள், பீன்ஸ் போன்றவை புரதச்சத்து மிக்க உணவுகளாகும். இவை உடலில் பிரசவத்திற்குப் பின் மீட்க உதவுகிறது. அதே நேரம் மருத்துவரின் பரிந்துரைப்படி, சரியான அளவிலான புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Walking Benefits: கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

பச்சை காய்கறிகள்

பிரசவத்திற்குப் பின் உணவில் பச்சை இலைக் காய்கறிகளைச் சேர்ப்பது அவசியமாகும். ஏனெனில், பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள், கால்சியம், நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் போன்றவை அடங்கும். மேலும் இவற்றில் குறைந்த கலோரிகள் மற்றும் நல்ல ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகமாக இருப்பதால் கர்ப்பத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கு உதவுகின்றன.

தண்ணீர்

தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோம் என்பதன் மூலமே, பால் உற்பத்தி கட்டுப்படுத்தப்படும். பிரசவத்திற்குப் பின் உணவில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லையெனில், மலச்சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Menstruation Symptoms: மாதவிடாய் அறிகுறிகள் வயதுக்கு ஏற்ப எவ்வாறு மாறுகின்றன

பால் பொருள்கள்

எலும்பு வலிமைக்கு கால்சியம் நிறைந்த பால்பொருள்களை உணவாகச் சேர்க்கலாம். இவை குறைந்த அளவிலான கொழுப்பைக் கொண்டிருக்க வேண்டும். பிரசவத்திற்குப் பின், எடை அதிகரிக்கும் என்று சிலர் பாலில் இருந்து விலகி இருப்பர். அவர்கள் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் படி பால், மோர் மற்றும் தயிர் உள்ளிட்ட குறைந்த கொழுப்புள்ளவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Time Vaccines: கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுக்க வேண்டிய தடுப்பூசிகள் இது தான்

Image Source: Freepik

Read Next

Period Fatigue: மாதவிடாயின் போது ஏற்படும் சோர்வை சமாளிக்க உதவும் சில வழிகள்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version