கர்ப்ப காலத்தின் போது பெண்கள் தங்களது ஆரோக்கியத்துடன், தங்கள் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு ஆகியவை உதவும். மேலும் இதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், தடுப்பூசிகள் தாய் மற்றும் குழந்தை இருவரையும் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுக்க வேண்டிய தடுப்பூசிகளைப் பற்றி அறிய, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ ஆலோசகர், மருத்துவர் சுஷ்மா தோமரை எங்கள் குழு அணுகியது.
கர்ப்பத்திற்கு முன் தடுப்பூசி எடுக்காத அல்லது தவறவிட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக எடுக்க வேண்டிய தடுப்பூசிகள் இங்கே:
டெட்டனஸ்-டிஃப்தீரியா-பெர்டுசிஸ் (Tdap):

Tdap என்பது தடுப்பூசிகளின் கலவையாகும். இது டெட்டனஸ், டிஃப்தீரியா மற்றும் வூப்பிங் இருமல் போன்ற மூன்று ஆபத்தான பாக்டீரியா நோய்களுக்கு எதிராக போராடும். இதனை 27 முதல் 36 வாரங்களுக்குள் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என மருத்துவர் தோமர் கூறினார்.
Fluvac தடுப்பூசி:
ஃப்ளூவாக் தடுப்பூசி, வைரஸ் காய்ச்சல்களை தடுக்க உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுபுது வைரஸ் உருவாகிறது. இதற்கு ஏற்றவாறு, இந்த தடுப்பூசி புதுப்பிக்கப்படுகிறது. காய்ச்சலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க 27 வாரங்களுக்கு அருகில் கர்ப்பிணி பெண்கள் இந்த தடுப்பூசியை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கோவிட்-19 தடுப்பூசி:

கருத்தரிப்பதற்கு முன் தாய் அதை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், கர்ப்ப காலத்தில் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த தடுப்பூசிக்குப் பிறகு, மற்றொரு தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கு முன் 14 நாட்கள் இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த தடுப்பூசி கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் எடுக்கலாம்.
நீங்கள் சர்வதேச அளவில் பயணம் செய்கிறீர்கள் என்றால், தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். தடுப்பூசி எடுப்பதற்கு நேரம் முக்கியமானது.
டாக்டர் தோமரின் கூற்றுப்படி, தடுப்பூசிக்குப் பிறகு, ஆன்டிபாடிகள் தங்கள் வேலையைத் தொடங்குவதற்கும், பிரசவத்திற்குப் பிறகு, இந்த ஆன்டிபாடிகள் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பாதுகாக்கவும் குறைந்தபட்சம் 14 நாட்கள் ஆகும். மேலும், அனைத்து தடுப்பூசிகளும் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது அல்ல. எனவே, எதிர்பார்க்கும் தாய்மார்கள் தாங்கள் எடுக்க வேண்டிய தடுப்பூசிகள் மற்றும் தவிர்க்க வேண்டிய தடுப்பூசிகளை அறிய தங்கள் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.
Image Source: Freepik