கர்ப்ப காலத்தில் நட்ஸ், ட்ரை ஃபுரூட்ஸை பாதுகாப்பாக எப்படி சாப்பிடலாம்? மருத்துவர் தரும் விளக்கம்

What is the best way to eat dry fruits during praegnancy: கர்ப்ப காலத்தில் நட்ஸ், ட்ரை ஃபுரூட்ஸ் சாப்பிடுவது தாய் மற்றும் சேய் இருவருக்கும் நன்மைகளை அளிக்கும். ஆனால், கர்ப்ப காலத்தில் இதை பாதுகாப்பாக எப்படி எடுத்துக் கொள்வது என்பது பற்றி அறிந்திருத்தல் அவசியம். இதில் கர்ப்பிணி பெண்கள் நட்ஸ், ட்ரை ஃபுரூட்ஸை எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கர்ப்ப காலத்தில் நட்ஸ்,  ட்ரை ஃபுரூட்ஸை பாதுகாப்பாக எப்படி சாப்பிடலாம்? மருத்துவர் தரும் விளக்கம்


How to consume nuts during pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவுமுறைகளில் அதிக கவனம் செலுத்திருத்தல் அவசியமாகும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் அவர்கள் உண்ணும் உணவுகள் தாய் மற்றும் சேய் இருவரது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம், ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதி செய்வதில் சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இது கருவின் சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இந்த நேரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு ஏற்ப தாயின் உடலை மாற்றியமைக்கவும் ஊட்டச்சத்துக்கள் அவசியமாகும்.

நன்கு சீரான உணவுகளை சாப்பிடுவது பிரீக்ளாம்ப்சியா, கர்ப்பகால நீரிழிவு, மற்றும் குறைந்த பிறப்பு எடை போன்ற சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கிறது. குறிப்பாக, கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய கொட்டைகள் மற்றும் உலர் பழங்கள் அவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக நட்ஸ் வகைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை ஆகும். இவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டுள்ளது.

இது தவிர, நட்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற தாதுக்களும் உள்ளன. இவை கர்ப்ப காலத்தில் மிகவும் இன்றியமையாததாகும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவை கர்ப்ப காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாக விளங்கும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பமா இருக்கீங்களா.? அப்போ மீன் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்னை எல்லாம் வரும்.!

கர்ப்ப காலத்தில் நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் சாப்பிடலாமா?

எனினும், கர்ப்ப காலத்தில் கொட்டைகள் மற்றும் உலர் பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற பொதுவான தவறான கருத்து நிலவி வருகிறது. இது குறித்து இன்ஸ்டாகிராம் வீடியோவில், மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஞ்சலி குமார் இந்த கட்டுக்கதையை உடைத்து, கர்ப்ப காலத்தில் உணவில் நட்ஸ் மற்றும் உலர் பழங்களை பாதுகாப்பாகச் சேர்ப்பதற்கான சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி விரிவாகக் காண்போம்.

image

tips for consuming nuts and dry fruits during pregnancy

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய நட்ஸ், உலர் பழங்கள்

மருத்துவரின் கூற்றுப்படி, "முதல் மூன்று மாதங்களில் அல்லது கர்ப்பத்தின் வேறு எந்த நேரத்திலும் உலர் பழங்களை சாப்பிடுவதால் இரத்தப்போக்கு அல்லது கருக்கலைப்பு ஏற்படாது. மேலும், இரத்தப்போக்கு அல்லது கருக்கலைப்பானது பிற தீவிர மகளிர் மருத்துவ காரணங்களால் ஏற்படுகிறது. உண்மையில் உலர் பழங்கள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானவை மற்றும் நன்மை பயக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்த நட்ஸ் மற்றும் உலர் பழங்களின் விவரங்களைக் குறித்து காணலாம்.

வால்நட்ஸ்

இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாக விளங்குகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சியை ஆதரிக்கின்றன.

பேரிச்சம்பழம்

இவை கர்ப்ப காலத்தின் போது ஆரம்ப நிலையில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை நிர்வகிக்க உதவக்கூடிய இயற்கையான ஆற்றல் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகின்றன. கூடுதலாக இவை இரும்பின் நல்ல மூலமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Nuts: தினமும் காலையில் ஒரு கைப்பிடி ஊறவைத்த வேர்க்கடலை, பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுவதன் நன்மைகள்!

பாதாம்

இதில் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இவை இரண்டுமே ஆரம்பகால கரு வளர்ச்சிக்கு முக்கியமானவை ஆகும்.

திராட்சை மற்றும் அத்திப்பழம்

இவை இரண்டுமே இரும்புச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரைகளால் நிரம்பியதாகும். இவை கர்ப்ப காலத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

image

how to take nuts during pregnancy

கர்ப்ப காலத்தில் நட்ஸ், உலர் பழங்களை சாப்பிடும் முறை

டாக்டர் அஞ்சலி குமார் அவர்கள் நட்ஸ் மற்றும் உலர் பழங்களை பாதுகாப்பாக உட்கொள்வதற்கான மூன்று குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

  • பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை ஊறவைத்து சாப்பிடலாம். ஏனெனில் இவற்றை ஊறவைக்கப்படாவிட்டால் அதிக அளவில் ஜீரணிக்க கடினமாக இருக்கும். எனவே அவற்றை ஒரே இரவில் ஊற வைக்க வேண்டும்.
  • சிலருக்கு முந்திரி, வால்நட்ஸ் போன்ற குறிப்பிட்ட நட்ஸ் வகைகளுக்கு ஒவ்வாமை இருக்கலாம். இவை கருச்சிதைவை ஏற்படுத்தாது, எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். எனவே ஒவ்வாமை உள்ள கொட்டைகளைத் தவிர்ப்பது நல்லது.
  • அதிகளவு சாப்பிடுவது வீக்கம் மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கலாம். இது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், குழந்தைக்கு தீங்கு விளைவிக்காது. எனவே மிதமாக சாப்பிடுவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

கூடுதல் குறிப்புகள்

மிதமான அளவிலான நட்ஸ், உலர் பழங்கள் சாப்பிடுவது முக்கியமாகும். உலர் பழங்கள் கலோரிகள் நிறைந்தவையாகும். எனவே ஒரு நாளைக்கு ஒரு சிறிய கைப்பிடி அளவு சாப்பிடலாம். அதே சமயம், உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அவர் “உலர்ந்த பழங்கள் பாதுகாப்பானவை மட்டுமல்ல. இவை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து சக்தியாகும். வால்நட்ஸ், பாதாம், அத்திப்பழங்கள் மற்றும் பேரீச்சம்பழங்கள் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆற்றலை அதிகரிக்கும், செரிமானத்தை உதவும் மற்றும் குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்கும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Eating Nuts Everyday: தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?

Image Source: Freepik

Read Next

IUI சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? சிகிச்சைக்கு தயாராவது முதல் வெற்றி விகிதம் வரை - மருத்துவர் விளக்கம்!

Disclaimer