IUI சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? சிகிச்சைக்கு தயாராவது முதல் வெற்றி விகிதம் வரை - மருத்துவர் விளக்கம்!

குழந்தைப்பேறுக்காக பல்வேறு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்று, கருப்பையக கருவூட்டல் எனப்படும் Intrauterine insemination (IUI).
  • SHARE
  • FOLLOW
IUI சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? சிகிச்சைக்கு தயாராவது முதல் வெற்றி விகிதம் வரை - மருத்துவர் விளக்கம்!


இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

IUI சிகிச்சையில் ஒரு சுழற்சிக்கான செலவு எவ்வளவு? எத்தனை முறை முயற்சிக்கலாம்?

ஒரு IUI சிகிச்சை சுழற்சிக்கான செலவு ரூ 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆகலாம். சம்பந்தப்பட்ட கணவன் மற்றும் மனைவியின் உடல்சார்ந்த பிரச்சனைகளைப் பொறுத்து சிகிச்சைக்கான எண்ணிக்கையை முயற்சிக்கலாம். அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு முறை வரை முயற்சி செய்யலாம். 35 வயதிற்கு மேலுள்ள பெண்கள், AMH (Anti-Mullerian hormone), குறைவாக இருக்கும் பெண்கள், விந்தணுக்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருப்பவர்கள், கருக்குழாயில் ஒருபக்கம் அடைப்பு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் திரும்பத் திரும்ப IUI சிகிச்சை மேற்கொள்ளாமல், மூன்று முறைக்கு மேல் முயற்சிக்காமல் IVF சிகிச்சைக்கு மாறுவது நல்லது.

IUI முறையில் விந்தணு செலுத்திய பிறகு பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

IUI யில் முறையில் கருமுட்டை வெடிக்கும் தருணத்தில் பெண்களின் கர்ப்பபையில் விந்து உள்ளே செலுத்தப்படும். விந்தணுவும், கருமுட்டையும் பெண்ணின் கருக்குழாயில் இயற்கையாக இணைந்து கருவாகி கர்ப்பபையில் வளரும்.

விந்து உள்ளே செலுத்தப்பட்ட பிறகு தோராயமாக 18லிருந்து 20 நாட்களில் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அப்போது கரு உருவாகி இருக்கிறதா என்பது தெரியவரும். கரு தங்கியதை சற்று முன்னதாகவே அறிய ரத்தத்தில் serum beta HCG என்கிற சோதனையும் செய்து பார்க்கலாம்.

IUIயின் வெற்றியை அதிகரிக்க, எப்படித் தயாராக வேண்டும்?

  • IUI சிகிச்சையைப் பொறுத்தவரை பெண்ணிற்கு 35 வயதிற்கு மேலாகி விட்டால் வெற்றி விகிதம் குறைவு. திருமணமாகி ஓராண்டு காலமாகியும், கணவன் மனைவி கருத்தரித்தலுக்கு இயற்கையான முறையில் முயன்றும் கரு நிற்கவில்லை எனில், அடிப்படையான விந்தணு சோதனை, கருமுட்டை உருவாகிறதா என்பது குறித்த சோதனை, கருக்குழாய் சோதனைகளைச் செய்ய வேண்டும்.
  • இம்மூன்றும் சரியாக இருந்தும், வேறேதும் ஆபத்துக் காரணிகள் இல்லையெனில் அடுத்த ஒரிரு ஆண்டுகளுக்கு இயற்கையான முறையில் கருத்தரித்தலுக்கு முயற்சிக்கலாம். அப்போதும் கரு நிற்கவில்லை எனில் ஒவுலேசன் இன்டெக்சன் மருத்துவ முறைக்கு மாறிக்கொள்வது நல்லது.
  • ஓவுலேசன் இன்டெக்சன் இரண்டு அல்லது மூன்று சுழற்சிகள் எடுத்த பின்னரும் நிற்கவில்லை எனில் கருக்குழாய் பரிசோதனை, விந்து பரிசோதனை செய்த பின்னர் IUI சிகிச்சைக்குச் செல்வது நல்லது.
  • IUI செய்த பிறகு சிறுநீரகத் தொற்று, இருமல் சளி, காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ளும் போது வெற்றிவிகிதம் அதிகரிக்கும். அதேபோல விந்துவின் தரமும் நன்றாக இருக்க வேண்டும். இரண்டு கருக்குழாயில் ஒன்றாவது திறந்திருக்க வேண்டும்.
  • ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்க வேண்டும். IUI தோல்வியுறும் போதும் IVF, ICSI சிகிச்சை முறைக்கு மாற வேண்டும். அதில் வெற்றி விகிதம் நன்றாகவே இருக்கும்.
  • இதில் பொதுவான பிரச்சனை என்னவென்றால் சிலர் பத்து முறைக்கு மேலும் தொடர்ந்து IUI சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இதனால் வயதும் அதிகமாகி விடுகிறது. கருமுட்டையும் குறைந்து விடுகிறது. அதன் பிறகு IVF முயற்சிக்கும் போது அதன் வெற்றி விகிதம் குறைந்து விடுகிறது.

 

  • எனவே IUI இரண்டு, மூன்று முறை முயற்சித்த பிறகு, சிறந்ததொரு கருவுறுதல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று, கணவரின் விந்து பரிசோதனை (sperm morphology) மனைவியின் AMH (Anti-Mullerian hormone), ஹார்மோன் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் தொடர்ந்து IUI தொடர்வதா அல்லது IVF-ற்கு மாறுவதா என கேட்டு தெளிவு பெறுவது அவசியம்.
  • பெண்ணின் வயது 35 தாண்டும் போது மூன்று முறைக்கு மேல் IUI க்கு முயற்சிக்காமல் IVF சிகிச்சைக்கு மாறுவது நல்லது. பெண்ணிற்கு 35 வயதிற்கு கீழ் உள்ள போதும், பரிசோதனையில் விந்து இயல்பாக இருக்கும் போதும் 6 முறை IUI சிகிச்சையும் பின்பு IVF சிகிச்சை எடுத்துக் கொள்வதும் சிறந்தது.
மேலும் விவரங்களுக்கு: https://jeevanmithrafertilitycentre.com/

Image Source: Freepik

Read Next

Fertility Diet: பெண்களே சீக்கிரம் குழந்தை பிறக்கணுமா? - கருவுறுதல் நிபுணர் சொல்லும் இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடுங்க

Disclaimer

குறிச்சொற்கள்