இந்த ட்ரை ஃபுரூட்ஸ் சாப்பிடுங்க! யூரிக் ஆசிட் தானாகவே குறைஞ்சிடும்

  • SHARE
  • FOLLOW
இந்த ட்ரை ஃபுரூட்ஸ் சாப்பிடுங்க! யூரிக் ஆசிட் தானாகவே குறைஞ்சிடும்

இந்நிலையில் யூரிக் அமிலத்தைக் குறைக்க அதற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது ஓரளவு நிவாரணத்தை அளிக்கும். ஒருவருக்கு சாதாரண யூரிக் அமிலத்தை விட அளவு அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க சில எளிதான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது உள்ளிட்டவற்றை செய்யலாம். இந்த அதிகப்படியான யூரிக் அமிலம் சிறுநீரகக் கற்கள், கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த அதிக யூரிக் அமில அளவைக் கட்டுக்குள் வைக்க அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உலர் பழங்களை உட்கொள்ளலாம். இதில் யூரிக் அமிலத்தைக்குறைக்க உதவும் உலர் பழங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Eating cashew: தினமும் முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடுமா அல்லது குறையுமா?

யூரிக் அமில அளவைக் குறைக்கும் உலர் பழங்கள்

முந்திரி

முந்திரி மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவுகிறது. யூரிக் அமில அளவைக் கட்டுக்குள் வைக்க சீரான வளர்சிதை மாற்றம் முக்கியம் ஆகும். இது தவிர, முந்திரி மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும். இவை ஒட்டுமொத்த சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் அதிகப்படியான யூரிக் அமிலத்தை திறம்பட அகற்ற உதவுகிறது. எனினும், மற்ற உலர் பழங்களுடன் ஒப்பிடுகையில் முந்திரி சற்றே அதிகமாக பியூரின்களைக் கொண்டுள்ளது. எனவே இதை மிதமாக உட்கொள்வதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

பாதாம்

இது உணவு நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். எனவே இவை செரிமான அமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சிறுநீரகங்கள் மூலம் அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. இது தவிர, பாதாம் ஆனது வைட்டமின் ஈ மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. பாதாமில் பியூரின்கள் குறைவாக இருப்பதால், இவை ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் யூரிக் அமில அளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பேரீச்சம்பழம்

இது பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த வளமான மூலமாகும். இவை இரண்டுமே சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டத்தில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றுவதற்கு சரியான சிறுநீரக செயல்பாடு அவசியமாகும். பேரீச்சம்பழம் இயற்கையாகவே இனிப்பு மற்றும் அதிக சர்க்கரை கொண்டவையாக இருப்பினும், இதில் ப்யூரின்கள் இல்லை. எனவே யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோர்க்கு இது பாதுகாப்பான தேர்வாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பருப்பு சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகரிக்குமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

வால்நட்ஸ்

இது அதிகளவிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை அதிக யூரிக் அமிலத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது. மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது குறிப்பாக கீல்வாதத்தின் பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது. இது உயர்ந்த யூரிக் அமிலத்துடன் தொடர்புடைய ஒரு நிலையாகும். மேலும் வால்நட்ஸ்கள் குறைந்த பியூரின் அளவைக் கொண்டுள்ளதால் இது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த சிறந்த தேர்வாக அமைகிறது.

பிஸ்தா

இது பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டதாகும். இவை உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் அதிக ஆக்ஸிஜனேற்ர அழுத்தம் காரணமாக வீக்கம், அதிக யூரிக் அமிலம் போன்றவை ஏற்படலாம். பிஸ்தாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும் இவை அதிக யூரிக் அமில அளவுகளுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, பிஸ்தா பருப்புகள் குறைந்த பியூரின்களைக் கொண்டுள்ளது. எனவே இது யூரிக் அமிலத்தைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.

உடலில் உள்ள அதிக யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த இந்த ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமிலத்தைக் குறைத்து கீல்வாதத்தைத் தடுக்கும் சூப்பர் காலை உணவுகள் இதோ!

Image Source: Freepik

Read Next

சாப்பிட்ட உடன் டீ காபி குடிக்கிறீர்களா.? எச்சரிக்கை.!

Disclaimer