Does Lentils Foam Increase Uric Acid: நமது தினசரி உணவில் பருப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது சுவையில் மட்டும் சிறந்தது அல்ல, புரதம் உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. மேலும், பருப்பு வகைகளில் உள்ள வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
ஆனால் பருப்பு வகைகள் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான விஷயங்களும் கூறப்படுகின்றன. பருப்பு வகைகளை அதிகமாக உட்கொள்வதால் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால், பல கடுமையான பிரச்சனைகளின் ஆபத்தும் அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : Raw Tomato Benefits: தக்காளியை பச்சையாக சாப்பிடலாமா? இதனால் என்ன பயன்?
குக்கரில் சமைத்த பருப்பு வகைகளை உண்பதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குக்கரில் சமைத்த பருப்பை உட்கொள்வதால் உண்மையில் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்குமா? இல்லை, இந்த கருத்து வரானதா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நுரையடித்த பருப்பை சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகரிக்குமா?

பருப்பை திறந்த பாத்திரத்தில் சமைக்க வேண்டும் என்றும், சமைக்கும் போது வெளியேறும் நுரையை நீக்கிய பின்னரே அதை உட்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம், பெரும்பாலான வீடுகளில், பிரஷர் குக்கரில் உணவு தயாரிக்கப்படுகிறது, பருப்புகளை சமைக்கும் போது, நுரை உள்ளே இருக்கும்.
எனவே தான் குக்கரில் தயாரிக்கப்பட்ட பருப்புகளை உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள வாதம் என்னவென்றால், யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் கூறுகள் நுரைத்த பருப்பில் காணப்படுகின்றன, இதன் நுகர்வு உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Spinach Benefits: பெண்களே! நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ தினமும் கொஞ்சம் கீரை சாப்பிடுங்கள்!
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூர். இவர் நுரைத்த பருப்பை உட்கொள்வது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, பியூரின் அதிகம் உள்ள உணவுகள் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க காரணமாகின்றன. அதிக அளவு பியூரின்களைக் கொண்ட உணவுகளை உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்தும். பருப்பு வகைகளில் பியூரினின் அளவு மிகக் குறைவு, எனவே பருப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
பருப்பு வகைகளை சமைக்கும் போது வரும் நுரை உண்மையில் புரதங்கள், சபோனின்கள் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றால் ஏற்படுகிறது” அவர் கூறினார். பருப்பு வகைகளில் சபோனின் அளவு மிகக் குறைவாக உள்ளது மற்றும் அதன் நுகர்வுக்கும் யூரிக் அமிலத்தின் அதிகரிப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை.
இந்த பதிவும் உதவலாம் : Cashew Nuts: அளவுக்கு அதிகமா முந்திரி சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படுமா? உண்மை என்ன?
உடலில் உணவு செரிமானம் ஆனதும் யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைகிறது. இவை உடலில் வடிகட்டப்பட்டு சிறுநீரகங்கள் வழியாக வெளியேறும். ஆனால், நமது உடலில் பியூரினின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகங்களால் யூரிக் அமிலத்தை சரியாக வடிகட்ட முடிவதில்லை, அதன் காரணமாக உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் பியூரின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. அதிக அளவு பியூரின்களைக் கொண்ட உணவுகளை மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
Pic Courtesy: Freepik