Period Fatigue: மாதவிடாயின் போது ஏற்படும் சோர்வை சமாளிக்க உதவும் சில வழிகள்

  • SHARE
  • FOLLOW
Period Fatigue: மாதவிடாயின் போது ஏற்படும் சோர்வை சமாளிக்க உதவும் சில வழிகள்


மாதவிடாய் சோர்வுக்கான காரணங்கள்

பொதுவாக, மாதவிடாயின் போது ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் என்றாலே மனநிலை மாற்றங்கள், வீக்கம், மாதவிடாய் பிடிப்புகள், தலைவலி உள்ளிட்டவையே அடங்கும். ஆனால், சில பெண்களுக்கு இந்த அறிகுறிகளுடன் தங்களது ஆற்றல் அளவு குறைந்து பலவீனமாக இருப்பதை உணர்வர். அதற்குச் சில காரணங்கள் உள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

சர்க்கரை பசி

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் கூடிய கார்போஹைட்ரேட்டுகள் அல்லது இனிப்புகளை விரும்பி உண்ணத் தூண்டும். இவ்வாறு சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்வது ஆற்றலை அதிகரிக்கும். எனினும், சர்க்கரை செயலிழப்பு பின்தொடர்ந்து, மீண்டும் சர்க்கரை பொருள்களுக்கு அடிமையாவதைத் தூண்டும்.

குறைந்த இரும்புச்சத்து

மாதவிடாயின் போது ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடு உடலைச் சோர்வடையச் செய்கிறது. எனவே, இந்த காலத்தில் இரும்புச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: Periods Pain Relief Tips: இயற்கையான முறையில் மாதவிடாய் வலியை எவ்வாறு குறைப்பது?

ஹார்மோன் மாற்றங்கள்

மாதவிடாய்க்கு முன்னும், பின்னும் அனுபவிக்கும் சோர்வுக்கு முக்கிய காரணம் ஹார்மோன்களும் ஒன்றாகும்.

மாதவிடாய் சோர்வை நீக்குவதற்கான வழிகள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சோர்வைக் குறைக்கவும், அதனை எதிர்த்துப் போராடவும் சில வழிகள் உள்ளன.

நல்ல தூக்கம்

சாதாரண நேரங்களிலும், மாதவிடாய் நேரங்களிலும் இரவு உறக்கம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் போதுமான தூக்கத்தைப் பெறுவதும் இன்றியமையாததாகும். இவ்வாறு நல்ல உறக்க சூழ்நிலைகளுடன் உறங்குவது தரமான தூக்கத்தைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Naturally: இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்?

நீரேற்றமாக வைத்திருப்பது

உடலில் ஏற்படும் நீரிழப்பு மற்றும் சோர்வு தொடர்புடைய ஒன்றாகும். எனவே தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்து நீரேற்றமாக இருப்பது நல்லது. சர்க்கரை பானங்களைச் சேர்த்துக் கொள்வதற்குப் பதில் தண்ணீரைக் குடிப்பது உடல் சோர்வை மோசமாக்கும்.

ஊட்டச்சத்து உணவுகள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சோர்வு, உடல் வலிமையாக இருப்பதற்குத் தேவையான ஆற்றல் இல்லாமல் இருப்பது காரணமாகும். எனவே இந்த மாதவிடாய் அறிகுறிகளை எளிதாக்க ஊட்டச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த நேரத்தில் விரும்பி உண்ணத் தூண்டும் சர்க்கரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மாதவிடாய் காலத்தில் காய்கறிகளை எடுத்துக் கொள்வது உடலில் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்க உதவும். அதன் படி, வைட்டமின் பி நிறைந்த இலை கீரைகள் மற்றும் இரும்புச்சத்து கொண்ட உணவுப் பொருள்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cup: மென்சஸ் கப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா? தெரிஞ்சிகிட்டு பயன்படுத்தலாமே!

உடற்பயிற்சி

உடல் சோர்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதாகும். அதே சமயம் மாதவிடாய் காலத்தில் லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற முடியும். இவ்வாறு உடற்பயிற்சி செய்யும் போது என்டோபின்கள் வெளியேறத் தொடங்கி இதயத்தை திறம்பட செயல்படச் செய்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இவ்வாறு உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சோர்வைத் தடுக்க முடியும்.

ரிலாக்ஸ் செய்வது

சுவாசப்பயிற்சிகள், லேசான உடற்பயிற்சி, யோகா, சூடான குளியல் மற்றும் தியானம் போன்ற எளிய முறைகளைப் பயன்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும், இந்த முறைகளைக் கையாள்வதன் மூலம் சிறந்த இரவு தூக்கத்தைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Early Periods Causes: மாதவிடாய் முன்கூட்டியே வருகிறதா? இது தான் காரணம்!

Image Source: Freepik

Read Next

Keto Diet In PCOS: PCOS-ஐ நிர்வகிக்க கீட்டோ டயட் உதவுவது எப்படி?

Disclaimer

குறிச்சொற்கள்