$
பெண் உறுப்பில் அதிக ஈரப்பதம் சேர்வதால், அவர்களது தனிப்பட்ட சுகாதாரம் பாதிக்கப்படும். இது பெண்ணுறுப்பில் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்குகிறது. இது பெண்ணுறுப்பில் சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும் இது சிறுநீரக தொற்றை ஏற்படுத்துகிறது.
அதிகமான வெப்பமோ அல்லது குளிரோ, யோனியில் ஈரப்பதத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் யோனி அரிப்பு, எரிச்சல் மற்றும் தொற்றுகளை தடுக்க முடியும். இதற்கான சில எளிய வழிகள் இங்கே.

- பிறப்புறுப்பு பகுதியை எப்போதும் உலர்வாக வைத்துக்கொள்ளவும்.
- ஈரமான ஆடைகளை அணிய வேண்டாம். இது பிறப்புறுப்பில் தொற்றை ஏற்படுத்தும்.
- பருத்தியால் செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியவும்.
- இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது காற்று ஓட்டத்தை கட்டுப்படுத்தி, மோசனாம பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கவும், நாற்றத்தை போக்கவும், அடிக்கடி பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும்.
- தீங்கு விளைவிக்கும் சர்பாக்டான்ட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
- கெமிக்கல் நிறைந்த பொருள்களை கொண்டு பிறப்புறுப்பை சுற்றம் செய்யாதீர்கள்.
- சிறுநீர் பாதை சுற்றமாக இருக்க உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு அதிகபடியான தண்ணீர் குடிக்கவும்.
- ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பேண வேண்டும்.
- காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதற்கு பதிலாக புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
Image Source: Freepik