Apple Vs Guava: எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.? சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிடலாம்?

  • SHARE
  • FOLLOW
Apple Vs Guava: எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.? சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிடலாம்?


கொய்யா ஆண்டு முழுவதும் கிடைக்கும். ஆனால் ஆப்பிள் அப்படி அல்ல. சீசனுக்கு தான் கிடைக்கும். கொய்யா எல்ல இடங்களிலும் கிடைக்கும். ஆனால் ஆப்பிள் அப்படி அல்ல. குளிர் பிரேதசங்களில் மட்டும் தான் கிடைக்கும். இதனாலேயே கொய்யாவை விட ஆப்பிள் விலை அதிகம். ஆனால் இவை இரண்டில் சத்தானவை எது? இதில் சர்க்கரை நோயாளிகளுக்கு எது சிறந்தது? என்று இங்கே விரிவாக காண்போம்.

கொய்யாவின் அற்புதமான நன்மைகள்

கொய்யாவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஆரஞ்சு பழத்தை விட அதிகமான வைட்டமின் சி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொய்யாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கால்சியம், இரும்புச்சத்து. வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இதனால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே காண்போம்.

செரிமானம் மேம்படும்

கொய்யாவில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று நார்ச்சத்து. நார்ச்சத்து மலத்தை திடப்படுத்துதல் மற்றும் மென்மையாக்குவதன் மூலம் செரிமானத்திற்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகிய இரண்டையும் குணப்படுத்தும்.

மாதவிடாய் வலியை குறைக்கும்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை போக்க கொய்யா உதவுகிறது. மாதவிடாய் காலங்களில் வவிகளை கையாள பெண்களுக்கு சிறந்த தேர்வாக கொய்யா திகழ்கிறது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கொய்யாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய் தொற்றுகள் ஏற்படாது. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

சர்க்கரையை குறைக்கும்

கொய்யா பழம் மட்டுமல்ல இலைகளும் நல்லதுதான். கொய்யா இலைகளில் உள்ள பாலிபினால்கள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை கட்டுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உணவுக்குப் பிறகு கொய்யா இலை தேநீர் அருந்துவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Black Vs Green Grapes: பன்னீர் திராட்சையா? பச்சை திராட்சையா? ஆரோக்கியத்தில் எது சிறந்தது?

ஆப்பிளின் ஆரோக்கிய நன்மைகள்

வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள்கள், நமக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். இதன் நன்மைகள் குறித்து இங்கே ஆராய்வோம்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்

ஆப்பிளில் நார்ச்சத்து உள்ளது. இதை ஜூஸாக குடிப்பதுடன், பழமாக சாப்பிடுவது நல்லது. இது கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடை குறையும்.

சர்க்கரை குறையும்

ஆப்பிள்களில் ஃபைபர் உள்ளடக்கம் இருப்பதால் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) குறைவாக உள்ளது . இது, அவற்றின் உயர் ஃபிளாவனாய்டு உள்ளடக்கத்துடன், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும்.

எலும்பு ஆரோக்கியம்

ஆப்பிள் உட்கொள்வது எலும்பு அடர்த்தி மற்றும் மேம்பட்ட எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஆப்பிள்கள், உடலில் இருந்து இழக்கப்படும் கால்சியத்தின் அளவைக் குறைக்கலாம். எனவே எலும்புகளின் வலிமையை மேம்படுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு எது சிறந்தது.?

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) 12-24 மதிப்பெண்கள் இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் நோக்கத்தில் உள்ளவர்களுக்கு கொய்யா பொருத்தமான தேர்வாகும்.

ஆரோக்கியமான நீரிழிவு உணவில் ஆப்பிள்கள் ஒரு சிறந்த பகுதியாகும். ஆப்பிளின் கார்ப் உள்ளடக்கத்தின் ஒரு பகுதி நார்ச்சத்து வடிவத்தில் வருகிறது. ஃபைபர் என்பது ஜீரணிக்க முடியாத கார்ப் ஆகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரையின் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது.

Image Source:

Read Next

சோடா குடிக்கலாமா.? இது உடலுக்கு நல்லதா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க..

Disclaimer

குறிச்சொற்கள்