சோடா குடிக்கலாமா.? இது உடலுக்கு நல்லதா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க..

  • SHARE
  • FOLLOW
சோடா குடிக்கலாமா.? இது உடலுக்கு நல்லதா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க..

சோடா என்றால் என்ன?

நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், விளையாட்டு வீரர்கள், தங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும், ஆற்றல் மிக்கவராக உணர வைக்கவும் சோடா தயாரிக்கப்பட்டது. இதில் சர்க்கரை இல்லை. இதில் செயற்கையான இனிப்பு உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக இருக்கும். இது கார்பனேட்டட் ட்ரிங்.

ஆனால், சில சோடாக்களில் செரிவூட்டப்பட்ட சர்க்கரை, இரசாயனங்கள், மற்றும் சில கெமிக்கல்ஸ் கலக்கப்படுகிறது. இதனை குடிப்பதால், பல அபாயகரமான உடல் நலப் பிரச்னைகள் ஏற்படும்.

இதையும் படிங்க: காபி குடித்தால் முடி கொட்டுமா.? ஏன் தெரியுமா.?

சோடாவால் ஏற்படும் பிரச்னைகள்

சோடா குடிப்பதை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சோடா குடித்தால் என்ன ஆகும் என்று இங்கே காண்போம்.

  • சோடாவில் High Fructose Corn Syrup எனப்படும் செயற்கை இனிப்புகள் கலக்கப்படுகின்றன. இதனால் நம் எலும்பை காக்கும் மெக்னீசியத்தை அரிக்கிறது.
  • சோடா அதிகம் குடித்தால், உடலில் உள்ள வைட்டமின் D-ஐ குறைத்து விடும்.
  • சோடாவில் உள்ள காஃபின், உங்கள் உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
  • சோடாவில் Phosphoric Acid உள்ளது. இது குடல் மற்றும் எலும்பை அரித்து விடும். பொதுவாக இந்த அமிலம் கறையை நீக்க பயன்படுத்தப்படுகிறது.
  • சாப்பாடு செரிக்க வேண்டும் என்று சோடா குடிப்பார்கள். ஆனால் இது வாயுவை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? மேலும் வாயு வெளியேறும் போதும் துர்நாற்றம் வீசும்.
  • சோடாவில் கலக்கப்படும் செயற்கை இனிப்புகள் புற்றுநோயை உருவாக்கும்.
  • சோடாவில் கலக்கப்படும் செயற்கை இனிப்புகள் பசியை தூண்டும். இதனால் அதிகம் சாப்பிடுவீர்கள். இது எடையை அதிகரிக்கும்.

பின் குறிப்பு

எல்லாவற்றையும் போலவே சோடாவையும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. இல்லையெனில் ஆபத்து. உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தால், சோடா எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

Image Source: Freepik

Read Next

Coconut water: வெயில் காலத்தில் இளநீர் குடிக்க சிறந்த நேரம் எது? முழு விவரம் இங்கே!

Disclaimer