ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது, 'An Apple A Day Keeps The Doctor Away' என்று. அது உண்மை. ஏனெனில் ஆப்பிள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால்தான் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பருவத்தைப் பொருட்படுத்தாமல் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் இதுவும் ஒன்று. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் விளக்குகிறார்கள். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதய பிரச்னை நீங்கும்
ஆப்பிளில் பாலிஃபீனால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள்களை சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தை பெருமளவு குறைக்கும்.
இதையும் படிங்க: Apple Juice Benefits: தினமும் காலை ஆப்பிள் ஜூஸ் குடிப்பது நல்லதா?
கொழுப்பு கரையும்
உடல் எடையை குறைப்பதிலும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் ஆப்பிள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிளில் இரண்டு வகையான நார்ச்சத்து உள்ளது. அதில் ஒன்று கொலஸ்ட்ராலைக் குறைப்பது. மற்றொன்று பெருங்குடலில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படுகிறது. இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கிறது.
ஆப்பிளின் மற்ற பலன்கள்
ஆப்பிளை தோலுரிக்காமல் சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதை சாப்பிட்டால்தான் ஆப்பிளில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு சரியாக கிடைக்கும். தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவது இதயத்தை பாதுகாப்பது மட்டுமின்றி எரிச்சல், மனச்சோர்வு போன்றவற்றிலிருந்தும் விலகி இருக்கும்.
எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால், சர்க்கரை நோய், பிபி போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. மேலும் பல வகையான புற்றுநோய் வராமல் தடுக்கிறது. பல நன்மைகள் இருப்பதால் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.