$
நமது நாளை தொடங்கும்போது காபி இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. காபி இல்லாமல் சிலருக்கு நாளே தொடங்காது. ஆஃபிஸில் பரபரப்பாக வேலை செய்யும்போதும், எல்லாம் முடிந்து வீடு திரும்பும்போதும், நாம் தேடுவது காபிதான்.
ஆனால் பெண்கள் அடிக்கடி காபி குடிப்பதால் எவ்வளவு பிரச்னைகள் ஏற்படும் தெரியுமா? குறிப்பாக தோல் மற்றும் முடிக்கு அதிக பிரச்னையை ஏற்படுத்தும். காபி பெண்களின் சருமம் மற்றும் முடிக்கு என்ன ஆபத்தை ஏற்படுத்தும் என்று இங்கே காண்போம்.

காபி சருமத்தை எவ்வாறு பாதிக்கும்?
காபி தோலில் பலவிதமான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவற்றில் பெரும்பாலானவை நீர்ப்போக்கிலிருந்து உருவாகின்றன. காபி குடிப்பதால் உங்கள் உடல் இயல்பை விட வேகமாக நீரிழக்கச் செய்யும்.
அதிகமாக காபி குடிப்பதால் கொலாஜன் இழப்பு ஏற்படும். இதனால் இளமையிலேயே சருமம் வயதானவர்கள் போல் காட்சியளிக்கும். உங்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அவை குணமாக அதிக நேரம் எடுக்கும்.
இந்த விளைவுகளை தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே காபி குடிக்க வேண்டும். அதிகம் குடிப்பதை தவிர்க்கவும். காலை மற்றும் மாலை தலா 1 கப் மட்டும் காபி குடிக்கவும். மேலும் காபியில் சர்க்கரை இல்லாமல் குடிக்கவும்.
இதையும் படிங்க: நடு ராத்திரியில் காஃபி குடிப்பவரா நீங்க? அப்போ கண்டிப்பா இதை படியுங்க!
காபி தலைமுடியை பாதிக்குமா?
காபி உங்கள் முடியை எதிர்மறையாக பாதிக்கும். இது முடி வறட்சி, முடி உதிர்வு போன்ற தீவிரமான பிரச்னைகளை ஏற்படுத்தும். அதிகமாக காபி உட்கொண்டால், முடி வளர்ச்சி குறையும்.
பெண்கள் அதிகமாக காபி குடிக்கும்போது, முடி வளர்ச்சியின்மை முடி மெலிந்துபோதல் மற்றும் முடி உதிர்வு ஏற்படும். காபி முற்றிலும் உங்கள் முடியை பாதிக்கும். நீங்கள் காபி அதிகமாக குடிப்பீர்கள் என்றால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்.

முடி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றால், காபி குடிப்பதை குறைக்கவும். ஹேர் மாஸ்க், கண்டிஷனர், ஷாம்பூ போன்றவற்றில் கவனம் செலுத்தவும். வாரம் இரண்டு முறை தலை குளிக்கவும். இயற்கை எண்ணெய் மீது கவனம் செலுத்தவும்.
குறிப்பு
காபி காரணமாக உங்கள் தலைமுடியில் பிரச்னைகளை நீங்கள் சந்தித்திருந்தால், அவற்றை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. தோல் மருத்துவரை அணுகவும். அவர்கள் உங்களுக்கான தீர்வை கொடுப்பார்கள்.
Image Source: Freepik