ஹல்வாவை மிஞ்சும் சுவை.. செஞ்ச உடனே காலியாகும் அசத்தல் ஸ்வீட்.. செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை.. இப்போவே செஞ்சி பாருங்க..

தட்டு நிறைய செய்தாலும் செய்த உடனே காலியாகும் செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்வீட் உக்கரை கேள்விபட்டிருக்கீங்களா? ஹல்வாவையே மிஞ்சும் சுவையை கொடுக்கும் இந்த உக்கரை, எப்படி செய்யனும் என்று இங்கே காண்போம். 
  • SHARE
  • FOLLOW
ஹல்வாவை மிஞ்சும் சுவை.. செஞ்ச உடனே காலியாகும் அசத்தல் ஸ்வீட்.. செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை.. இப்போவே செஞ்சி பாருங்க..

சமீபத்தில் ஆஹா.! ஓஹோ.! என்று போற்றப்படும் செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்வீட் உக்கரை, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் மிகவும் எளிமையான இனிப்பு வகையாகும். இதற்கு தேங்காய் கூடுதல் அமைப்பை சேர்க்கிறது. இந்த உக்கரை, செட்டிநாடு சமையலில் ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.

தட்டு நிறைய செய்தாலும் செய்த உடனே காலியாகும் செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்வீட் உக்கரை, ஹல்வாவையே மிஞ்சும் சுவையை கொடுக்கும். இதை வீட்டிலேயே எப்படி செய்வது.? இதற்காக தேவைப்படும் பொருட்கள் என்ன? என்று இங்கே விரிவாக காண்போம்.

artical  - 2025-03-20T223716.786

செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்வீட் உக்கரை ரெசிபி

தேவையான பொருட்கள்

* 1/4 கப் பாசிப்பருப்பு

* 1/8 கப் ரவை

* 1/8 கப் அரிசி மாவு

* 1/8 கப் தேங்காய் துருவல்

* 1/8 தேக்கரண்டி ஏலக்காய் தூள்

* ஒரு சிறிய சிட்டிகை உப்பு

* 1.5 தேக்கரண்டி உடைத்த முந்திரி

* 1 தேக்கரண்டி எண்ணெய்

* 4 தேக்கரண்டி நெய்

* சுமார் 3 1/2 கப் தண்ணீர்

* 1/2 கப் பொடித்த வெல்லம்

* 1/4 கப் தண்ணீர்

artical  - 2025-03-20T223749.626

செய்முறை

* ஒரு பாத்திரத்தில், வெல்லம் மற்றும் தண்ணீரைச் சேர்த்து, வெல்லம் முழுவதுமாக கரையும் வரை விடவும். பின்னர் இதனை ஒதுக்கி வைக்கவும்.

* தற்போது ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, ஒதுக்கி வைக்கவும்.

* அதே பாத்திரத்தில் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். பருப்பு பூத்து மென்மையாகும் வரை சமைக்கவும். பின்னர் இதனை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, தனியாக எடுத்து வைக்கவும்.

* தற்போது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை சூடாக்கி, ரவாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும், பின்னர் அரிசி மாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும்.

artical  - 2025-03-20T223533.826

* பின்னர் சமைத்த பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும், பின்னர் மாவு மற்றும் ரவை வேக 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். கெட்டியாகும் வரை சமைக்கவும். பின்னர் இதில் வெல்லம் கரைசலை சேர்த்து கலக்கவும்.

* இது ஒரு ஹல்வா பத்தற்கு சட்டியில் ஒட்டாமல் திரண்டு வரும். இப்போது இதில் ஏலக்காய்த் தூள், உப்பு மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும்.

* அவ்வளவு தான் செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை ரெடு. இதனை மிதமான அளவு சுவைத்து மகிழவும்.

மேலும் படிக்க: Egg Tomato Thokku: 2 முட்டை 1 தக்காளி இருந்தால் போதும்... சுவையான முட்டை தக்காளி தொக்கு செய்யலாம்!

Read Next

Egg Tomato Thokku: 2 முட்டை 1 தக்காளி இருந்தால் போதும்... சுவையான முட்டை தக்காளி தொக்கு செய்யலாம்!

Disclaimer