கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களில் நுங்கு முதன்மையானது. நீரிழப்பு ஏற்பட்ட உடனே சாப்பிட்டால், ரொம்ப சீக்கிரமா சுறுசுறுப்பா மாறிடுவீங்க. கோடையில தினமும் சாப்பிட்டால், வயிறு உப்புசம், அஜீரணம் மாதிரி பிரச்சனைகளும் குறையும். நுங்கு எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும். கல்லீரலைப் பாதுகாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த நன்மைகள் எல்லாம் இருப்பதால், கோடையில நிறைய நுங்கு சாப்பிடணும்னு டாக்டர்கள் பரிந்துரைக்கிறாங்க. ஆனா, எவ்வளவு ஆரோக்கியமா இருந்தாலும், தினமும் ஒரே மாதிரி சாப்பிட்டா, சலிச்சுடும்.
சில சமயங்கள் கொஞ்சம் விதவிதமாக சாப்பிடணும்னு தோணுது. சரி, இதை ஜூஸ் போட்டு குடிக்கலாம் என பார்த்தால், நுங்கில் உள்ள அதீத நீர்ச்சத்து, அதனை சுவையே இல்லாமல் சப்பென மாற்றிவிடும். எனவே அதிக பொருட்கள் சேர்க்காமல், மிக எளிமையாக, சுவையான ஜூஸ்களை தயாரிக்கலாம். மேலும், அதில் பல வகைகள் உள்ளன. நீங்கள் தினமும் முயற்சித்தாலும், சுவை மற்றும் ஆரோக்கியத்தைப் பெறலாம்.
நுங்கு மாக்டெய்ல்:
நுங்கை வைத்து ஒரு மாக்டெய்ல் செய்யலாம். அதுவும் மிகவும் எளிது. நீங்கள் மோஜிடோ போன்ற பானங்களை விரும்பினால், அதே செய்முறையை முயற்சி செய்யலாம்.
நுங்குடன் சிறிதளவு பால், ஏலக்காய் தூள், தேன் அல்லது சர்க்கரை கலந்து மிக்ஸியில் நன்றாக அடித்துக்கொள்ளவும். இத்துடன் புதினா இலைகள் மற்றும் கொஞ்சம் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறலாம். மோஜிடோவைப் போல் புளிப்புச் சுவையை விரும்பினால், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். கொஞ்சம் எக்ஸ்ட்ரா சுவை விரும்புவோர் சில துண்டு தர்பூசணி பழங்களைக் கூட இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
நுங்கு ரோஸ் மில்க்:
ரோஸ் மில்கில் நுங்கு கலந்து குடித்துப் பாருங்கள், அடிக்கிற வெயிலுக்கு சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். ரோஸ் எசஷ்ன்ஸ் கலந்த பாலுடன் சிறிதளவு நுங்கு கலந்து மிக்ஸில் நன்றாக அடிக்கவும். இதனை அப்படியே குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. நீங்கள் விரும்பினால் சுவையை அதிகரிக்க சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
நுங்கு ஸ்மூத்தி:
நுங்கை வைத்து குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்மூத்தியைக் கூட தயார் செய்து கொடுக்கலாம். தயிர், வாழைப்பழம், தேன் இத்துடன் நுங்கை சேர்த்து நன்றாக அரைக்கவும். சுவையான நுங்கு ஸ்மூத்தி தயார். காலை உணவு நேரத்தில் அல்லது உடற்பயிற்சிகளுக்குப் பிறகு காலையில் நீங்கள் அதைக் குடித்தால், உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
நுங்கு பாயாசம்:
முதலில் நுங்கை தோல் நீக்கி, சிறிய வடிவங்களில் வெட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் ஏலக்காய் மற்றும் பாதாம் பருப்பை எடுத்து மிக்ஸியில் சேர்த்து மென்மையான கலவையாக அரைக்க வேண்டும். இப்போது மென்மையான கலவையை பாலில் சேர்த்து, குறைந்து தீயில் கெட்டியாகும் வரை சமைக்கலாம். அதன் பிறகு, சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு இதை குறைந்த தீயில் சுமார் 3-4 நிமிடங்கள் வரை கிளறலாம். இந்த பாயாசத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து குடித்தால் குளு குளுவென சூப்பராக இருக்கும்.
ஐஸ்கிரீமும் தயாரிக்கலாம்:
தேங்காய் தண்ணீருடன் நுங்கு கலவையைக் கலந்து வடிவத்திற்கு ஏற்ப ஒரு பாப்சிகல் கேஸில் ஊற்றவும். அது உறையும் வரை வைக்கவும். அதன் பிறகு, நீங்கள் அதை வெளியே எடுக்கும்போது, அவை பாப்சிகல்ஸ் போல மாறும். மேலே தேங்காய் தண்ணீரை ஊற்றுவது நல்ல சுவையைத் தரும். ஐஸ்கிரீம்களை விரும்பும் குழந்தைகள் இதை மிகவும் விரும்புகிறார்கள். மேலும், வெளியில் கிடைக்கும் பாப்சிகல்ஸில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. அதனால்தான் இந்த கோடையில் வீட்டிலேயே புதினாவுடன் பாப்சிகல்ஸ் செய்தால், அதன் ஆரோக்கிய நன்மைகளையும் சுவையையும் அனுபவிக்கலாம்.
Image Source: Freepik