Nungu Sarbath: கோடை காலம் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. வெயில் காலத்தில் நீராகாரம் குடிக்க வேண்டிய மிக முக்கியம். இன்றைய காலக்கட்டத்தில் நுங்கு சர்பத் என்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. நுங்கு சர்பத் என்பது பலருக்கும் புதிதாக இருந்தாலும், சென்னை போன்ற இடங்களில் நுங்கு சர்பத் என்பது மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும்.
கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்க பலர் பல்வேறு பழங்களையும் ஜூஸ்களையும் உட்கொள்கிறார்கள். அத்தகைய நிலையில் உடல் சூட்டை குறைக்க கோடை காலத்தில் பெரிதும் உதவியாக நுங்கு இருக்கிறது. பலருக்கு நுங்கு சாப்பிடுவதைவிட நுங்கு சர்பத் குடிப்பது என்பது பெரிதும் எளிதாகவும் உதவியாகவும் இருக்கும். குறிப்பாக கோடை காலத்தில் மதிய வெயில் நேரத்தில் இதை குடிப்பது உடலுக்கு வரப்பிரசாதமாக இருக்கக் கூடும்.
மேலும் படிக்க: Nayuruvi Benefits: உங்களுக்கு நீண்ட நாள் உயிர்வாழ ஆசையா? அப்போ இந்த ஒரே ஒரு கீரையை மட்டும் சாப்பிடுங்க!
முதலில் நுங்கு சர்பத் தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்
3 முதல் 4 நுங்கு எடுத்துக் கொள்ளவும், பின் சப்ஜா விதை, கடல்பாசி அல்லது பாதாம் பிசின், பால் 1 கப், ஐஸ்கட்டி ஆகியவை எடுத்துக் கொள்ளவும். இதன் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். ஆனால் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை இனிப்பான கருப்பட்டி போன்றவற்றை எடுத்துக் கலந்துக் கொள்ளவும்.
சப்ஜா விதை அல்லது கடல்பாசியை பாலில் ஊற வைத்து நுங்கை துண்டுகளாக மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் கலந்துக் கொண்டால் போதும். நுங்கு சர்பத் ரெடி.
முக்கிய கட்டுரைகள்
நுங்கு சர்பத் ஆரோக்கிய நன்மைகள்
நுங்கு ஆனது பனை பழம் அல்லது ஐஸ் சர்பத் என்று அழைக்கப்படுகிறது. நுங்கில் குறைந்த அளவு கலோரிகளே இருக்கிறது. இதில் கால்சியம், பைட்டோநியூட்ரியன்ட்ஸ், வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. நுங்கு சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு பெரிதளவு நன்மை பயக்கும். அரிப்பு போன்ற பிரச்சனை நீங்கி சருமம் ஆரோக்கியமாக மாறும். அதுமட்டுமின்றி வறண்ட முடி போன்ற பிரச்சனைகளையும் நீக்க நுங்கு உதவியாக இருக்கும்.
- நுங்கு இயற்கையாகவே குறைந்த கலோரி பழமாகும். இது செரிமான பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வை அளிக்கும்.
- வயதான தோற்றம் ஏற்படுவது இது இயற்கையாகவே மெதுவாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
- உடல் எடையைக் குறைக்க விரும்பினால் தாராளமாக நுங்கு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதோடு வயிறு நிரம்பிய உணர்வையும் பூர்த்தியாக அளிக்கும்.
- வெப்ப பக்கவாதம் மற்றும் சூரிய தாக்கங்களுக்கு சிகிச்சையளிக்கு நுங்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நுங்கில் அதிகமாக உள்ளது.
- உடல் சோர்வை எதிர்த்து போராடுவதற்கும், மலச்சிக்கலை போக்கவும் நுங்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு கல்லீரல் பிரச்சனைக்கும் நுங்கு மிகவும் பயனளிக்கும்.
image source: social media