How to keep your stomach cool in summer: குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் இந்த காலநிலையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியமாகும். அதிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே கடும் வெயிலின் தாக்கத்தை பலரும் பல இடங்களில் அனுபவித்து வருகின்றனர். மும்பை போன்ற நகரங்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் அனைவருமே உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியமாகும்.
அவ்வாறு இந்த வெப்ப காலநிலையில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூன்று முக்கிய உணவுப்பொருள்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர், வெப்பத்தைத் தவிர்க்க என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பேல் சாறு , ஊறவைத்த பாதாம் மற்றும் மோர் போன்றவை மிகவும் நன்மை பயக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Body Heat: உடம்பு ரொம்ப ஹீட்டா இருக்கா? கூலா வெச்சிக்க இந்த ஆயுர்வேத மூலிகைகள் எடுத்துக்கோங்க
உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் பானங்கள்
வில்வபழ சர்பத்
வில்வ மரத்திலிருந்து பெறப்படும் சாறு ஒரு இயற்கையான மற்றும் நீரேற்றத்தை அளிக்கக் கூடிய பானமாகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வில்வ பழத்தில் டானின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் கூமரின் போன்ற அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் இருப்பதாக நிபுணர் கூறியுள்ளார். இவை வீக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. வில்வ பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இது தவிர, அன்றாட உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஹைப்பர்-லோக்கல், பருவகால பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், மதிய உணவிற்கு தயிர் சாதம் உட்கொள்வது கோடைக்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதில் உள்ள ப்ரீபயாடிக்குகள் மற்றும் புரோபயாடிக்குகளின் நல்ல கலவையானது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
ஊறவைத்த பாதாம்
அடுத்ததாக, வெப்பத்தைத் தவிர்த்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க ஊறவைத்த பாதாமை உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். பொதுவாக, ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது மூளையை கூர்மையாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், உடலை குளிர்விக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இது இயற்கையாகவே குளிர்ச்சி தரும் உணவாகும். இதை உட்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Spices For Summer: சம்மர்ல இந்த ஸ்பைசஸ் சாப்பிடுங்க! உடல் சூடு வேகமா குறைஞ்சிடும்
மோர் அருந்துவது
தினமும் மதிய உணவுடன் ஒரு கிளாஸ் மோர் அருந்த நிபுணர் திவேகர் பரிந்துரைக்கிறார். மோரில் நிறைந்துள்ள புரோபயாடிக்குகள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, இவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
வெல்லம் கலந்த தண்ணீர்
இரவு உணவுக்குப் பிறகு அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக வெல்லம் கலந்த நீரைக் குடிக்க வேண்டும். இந்த பானம் தயார் செய்வதற்கு, ஒரு கிளாஸ் நீரில் ஒரு டீஸ்பூன் வெல்லத்தைச் சேர்க்க வேண்டும். இந்த கலவையானது அமிலத்தன்மையைக் குறைப்பது, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
இது போன்ற ஆரோக்கியமான பானங்களை அருந்துவதன் மூலம் உடலைக் குளிர்ச்சியாக வைக்க முடியும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Summer Drinks: கோடையில் உடல் சூட்டைக் குறைக்க... இந்த பானங்கள வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க...!
Image Source: Freepik