Reduce Body Heat: அடிக்கும் வெயிலில் காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்? உடல் ஜில்லுனு இருக்க?

  • SHARE
  • FOLLOW
Reduce Body Heat: அடிக்கும் வெயிலில் காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்? உடல் ஜில்லுனு இருக்க?

எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை சாப்பிடுகையில் இது வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளித்து உடலுக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பை வழங்குகிறது. கோடையில், பகலில் அதிக சூரிய ஒளி மற்றும் வெப்பம் இருக்கும். இதன் காரணமாக, கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியம்.

குறிப்பாக காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடுகிறோம் என்பது மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியம். அதுவும் கோடை காலத்தில் காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடுகிறோம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சரி, காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிட வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்காம்.

கோடை வெயிலில் காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்?

தர்பூசணி

தர்பூசணியை கோடைக்காலத்தில் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால், உடலை நீரேற்றமாக வைத்திருக்கலாம். இந்தப் பழத்தில் 90 சதவிகிதம் நீர்ச்சத்தும், எலக்ட்ரோலைட்டுகளும் உள்ளதால், உடலில் உள்ள நீர்ப் பற்றாக்குறையை நீக்கி, நாள் முழுவதும் ஆற்றலைத் தருகிறது. தர்பூசணியை உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி கண் பிரச்சனைகளும் குறையும்.

பேரிச்சம்பழம்

கோடையில் வெறும் வயிற்றில் டேட்ஸ் எனப்படும் பேரிச்சம்பழம் சாப்பிடலாம். பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை இதில் உள்ளதால், உடலுக்கு வலிமை தருவதுடன், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.

வாழைப்பழம்

கோடையில் காலையில் சாப்பிட வாழைப்பழம் ஒரு சிறந்த தேர்வாகும். இது உடலுக்கு ஆற்றல் கொடுப்பதோடு வயிற்றுக்கும் நன்மை தரும். அதோடு வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். வாழைப்பழத்தில் சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, இது உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், மனநிலையையும் மேம்படுத்துகிறது.

ஓட்ஸ்

கோடையில் வயிற்றுக்கு ஆறுதல் அளிக்க குறைவான அளவு ஓட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஓட்ஸ் உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.

இந்த அனைத்து உணவுகளும் கோடை கால பிரச்சனையில் இருந்து உங்களை விடுவிக்க உதவும். கோடை வெயிலில் உங்கள் உடலுக்கும் சருமத்திற்கும் என தனித்தனியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஜங்க் ஃபுட் போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இவை அனைத்தும் உடலுக்கு ஆறுதல் தரும் என்றாலும் ஏதேனும் தீவிர பிரச்சனை இருக்கும்பட்சத்தில் முறையாக மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.

Image Source: FreePik

Read Next

Jaggery: கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் சர்க்கரை அல்லது வெல்லம் சாப்பிடுவது நல்லதா?

Disclaimer

குறிச்சொற்கள்