Jamun Seed Powder Benefits: நாவல் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை மிக்க பழமாகும். இவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. அது மட்டுமல்லாமல், இந்த பழங்களின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொடி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நாவல் பழப்பொடியானது நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
மேலும், இந்தப் பொடியின் ஊட்டச்சத்துக்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆயுர்வேதத்தில் ஜாமுன் விதை பொடி பல வகையான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இதில் ஜாமுன் விதை பொடி தயாரிக்கும் முறை குறித்தும், இதன் நன்மைகள் குறித்தும் ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் டாக்டர் சுகீதா முத்ரேஜா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: knee pain: முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற சூப்பர் ஃபுட்!
ஜாமுன் விதை தூள் தரும் நன்மைகள்
ஜாமுன் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் தூள், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும், இது சருமத்திற்கும், உடலிலிருந்து நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. இதில் ஜாமுன் விதை தூள் தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், ஜாமுன் பழத் தூளை எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள பண்புகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனினும், அதிக அளவிலான இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் படியே உட்கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயாளிகளுக்கு ஜாமுன் பழத்தை அருமருந்து என்றே கூறலாம். Pre Diabetics அல்லது Diabetes நோயாளியாக இருப்பின், இந்த ஜாமுன் விதை பொடியை எடுத்துக் கொள்ளலாம். ஜாமுன் விதை பொடியை உட்கொள்வது உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர, இதன் கிளைசெமிக் குறியீடுகளும் குறைவாக உள்ளது. அந்த வகையில் இவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஜாமுன் விதை பொடி மிகவும் நன்மை தரும். சர்க்கரை நோய் இல்லாமல் இருப்பவர்கள், இந்த பொடியை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.
நச்சுக்களை நீக்க
உடல் ஆரோக்கியத்திற்கு உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது நீக்குவத் அவசியமாகும். உடல் நச்சுக்களை நீக்க, சரியான உணவுமுறையைக் கையாள்வது அவசியம். அந்த வகையில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு ஜாமுன் விதை பொடியை சாப்பிடலாம். ஜாமுன் விதை பொடி உடலில் சேரும் அழுக்குகளை சிறுநீர் மூலம் எளிதில் வெளியேற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Substitutes for Curd: இந்த 5 பொருட்களை சாப்பிடாலும் தயிர் சாப்பிட்டதற்கான பலன் கிடைக்கும்!
உடல் எடை இழப்புக்கு
அதிக உடல் எடை கொண்டவர்கள், ஜாமுன் விதை பொடி சாப்பிடலாம். இவை உடலில் சேரும் அழுக்குகளுடன், கொழுப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது. தினமும் காலையில் ஜாமுன் விதை தூள் சாப்பிட்டு வர, உடல் எடையைக் குறைக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. எனவே எடை இழப்புக்கு உணவில் நாவல் பழப் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.
கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த பொடியை உட்கொள்வதன் மூலம் கல்லீரல் செல்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், கல்லீரல் மற்றும் இதயத்தின் வீக்கத்தைக் குறைத்து சீராக செயல்பட உதவுகிறது.
நாவல் பழப் பொடி தயார் செய்யும் முறை
வீட்டிலேயே எளிதான முறையில் ஜாமுன் விதை பொடியைத் தயார் செய்யலாம். இதில் ஜாமுன் விதை பொடி தயாரிக்கும் முறை குறித்துக் காணலாம்.
- முதலில் நாவல் பழ விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதை நன்கு கழுவி, பின் உலர வைக்க வேண்டும்.
- உலர்ந்த விதைகளை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளலாம்.
- நீங்கள் விரும்பினால், சந்தையின் இருந்து நாவல்பழ விதை பொடியை வாங்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Green Coriander Benefits: வெறும் வயிற்றில் பச்சை கொத்தமல்லி இலையை மென்று சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?
நாவல் பழ பொடியை சாப்பிடுவது எப்படி
நாவல் பழ பொடியை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் அளவு நாவல்பழ விதை பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
நாவல் பழ விதை பொடியை எப்போது சாப்பிடலாம்?
ஜாமுன் விதை பொடியை எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். எனினும், இதை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இந்தப் பொடியை எடுத்துக் கொள்வது உடல் அதன் சத்துக்களை எளிதில் உறிஞ்சி விடும்.
இவ்வாறு ஜாமுன் விதை பொடியை எடுத்துக் கொள்வதன் மூலம் மேலே கூறப்பட்ட ஆரோக்கியமான நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ABC Juice: வெறும் வயிற்றில் ஏபிசி ஜூஸ் குடிக்கலாமா? அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்!
Image Source: Freepik