Benefits Of Eating Dinner Early: நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளின் மூலம் பல்வேறு வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். உணவு முறை என்பது ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவை எடுத்துக் கொள்வதுடன் நிற்பதில்லை. உணவை எடுத்துக் கொள்ளும் நேரமும் அடங்கும். குறிப்பாக இரவு நேரங்களில் தாமதமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஆயுர்வேத முறைப்படி, இரவில் தாமதமாக சாப்பிடும் போது, எது சாப்பிட்டாலும் அது சரியாக ஜீரணமடையாது. ஏனெனில், உணவை ஜீரணிக்கத் தேவையான செரிமான நெருப்பு சூரியனைப் பின்பற்றுவதாக நம்பப்படுகிறது. எனவே பகல் நேரங்களில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் போது ஜீரண நெருப்பும் உச்சத்தில் இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Red Banana Eating Time: செவ்வாழைப் பழம் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?
தாமதமான இரவு உணவினால் ஏற்படும் விளைவுகள்
ஆயுர்வேதத்தில் எப்போதும் நேரத்திற்கு ஏற்ப உணவை உட்கொள்ளவும், உணவு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. மதிய நேரத்தில் எதைச் சாப்பிட்டாலும் எளிதில் செரிமானம் அடையும். ஆனால், இரவில் தாமதமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் இந்த நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கலாம். இதனால், உடல் எடை அதிகரிப்பு, இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
எப்போது சாப்பிடலாம்?
இரவு உணவை சீக்கிரமாக அதாவது 7.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். இது பல நோய்களில் இருந்து நம்மைக் காப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தரும். இரவு உணவை விரைவாக உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட டயட்டீஷியன் பவ்யா பீர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கியுள்ளார்.
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இரவு நேரத்தில் சீக்கிரம் உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
அசிட்டியிலிருந்து நிவாரணம் தர
இரவில் சீக்கிரமாக உணவு உண்ணும் போது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது குடலுக்கு ஓய்வு தருவதுடன், குடல் அழற்சியைக் குறைக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் வாயுவைப் போக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Soaked Dry Fruits: ஹெல்த்தியா இருக்க ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுங்க
எடைக் கட்டுப்பாடு
இரவில் விரைவாக உணவு உண்பது எளிதில் செரிமானம் அடைய வைக்கும். இதன் மூலம் உடலில் நச்சுக்கள் குவிவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுப்பதுடன், உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
முன்னதாக இரவு உணவை உட்கொள்வது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
ஆழ்ந்த உரக்கம்
கனமான உணவு செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். குறிப்பாக இரவு நேரங்களில் கனமான உணவை எடுத்துக் கொள்வது இரவில் தூக்கத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே லேசான உணவை எடுத்துக் கொள்வதுடன், முன்னதாக சாப்பிடுவது இரவில் நல்ல தூக்கத்தைத் தரும்.
செரிமான மேம்பாட்டிற்கு
சீக்கிரமாக இரவு உணவை உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்துவதுடன் உணவை ஜீரணிக்க எளிதாக்குகிறது.
இவ்வாறு இரவில் தாமதமாக உண்பதைத் தவிர்த்து விரைவில் உணவை எடுத்துக் கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Early Dinner Benefits: தினமும் இரவில் நேரமாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Image Source: Freepik