Early Dinner Benefits: தினமும் இரவில் நேரமாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Early Dinner Benefits: தினமும் இரவில் நேரமாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

இரவு உணவை சீக்கிரமாக அதிலும் இரவு தூக்கத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்வது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

ஆழ்ந்த உறக்கம்

இரவு சாப்பிட்ட உடனே தூங்குவது அல்லது தாமதமான உணவு நல்ல தூக்கம் இல்லாமல் போகலாம். இரவு நேரத்தில் அதிக உணவை எடுத்துக் கொள்வது அல்லது தாமதாக சாப்பிடுவது அஜீரணத்தை ஏற்படுத்தலாம். மேலும் இது இரவு நேரத்தில் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும். இது ஆழ்ந்த தூக்கத்தைக் கெடுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்

ஆரோக்கியத்தை மேம்படுத்த

எந்தெந்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது என்பது எவ்வளவு முக்கியமோ அது போல எந்த நேரத்தில் எடுத்துக் கொள்வதும் முக்கியமானதாகும். தவறிய அல்லது தாமதமான உணவு மாரடைப்பு அல்லது வேறு சில உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, இரவு நேரமே அதிக உணவை எடுத்துக் கொள்வர். மேலும் உடலில் கலோரிகள் எரிக்கப்படாத போது, அவை ட்ரைகிளிசரைடுகளாக மாற்றி, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

உடல் ஆற்றலை அதிகரிக்க

ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்வதன் மூலம், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம். இது மூளையை நன்றாக செயல்பட வைப்பதுடன், நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஆனால், காலை நேர உணவைத் தவிர்ப்பது அல்லது உணவைத் தாமதப்படுத்துவது குறைந்த ஆற்றலைத் தருவதுடன், குறைந்த இரத்த சர்க்கரை அளவு, சோர்வு, குறைந்த மனநிலை, அதிக பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். அதே சமயம் இரவில் பசியுடன் படுக்கைக்குச் செல்வதை விட, சிறிதளவு எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!

எடை அதிகரிப்பு

இரவு நேரத்தில் அதிகமாக உணவை எடுத்துக் கொள்வது அல்லது தாமதமாக உணவை சாப்பிடுவது அல்லது சாப்பிட உடனேயே தூங்குவது உள்ளிட்டவை எடை அதிகரிப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். ஏனெனில் அதிகமாக உணவை எடுத்துக் கொள்ளும் வகையில் தீவிர பசியை உண்டாக்கும். அதே சமயம் காலை உணவைத் தவறவிட்டால் அது உடல் எடையை அதிகரிப்பதுடன், இன்னும் பிற மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

எனவே, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் எவ்வாறு உணவு வகைகளை எடுத்துக் கொள்கிறோமோ அதே போல, உணவு எடுத்துக் கொள்ளும் நேரமும் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக, இரவு உணவை 7 மணிக்கு முன்னதாக எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்ல செரிமானத்தையும், ஆழ்ந்த உறக்கத்தையும் தருகிறது. மேலும் உணவில் கலோரிகள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், சரியான அளவிலான கொழுப்புகள் கொண்ட உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் எடை இழப்பைக் குறைப்பதுடன் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Coconut Water: தேங்காய் தண்ணீரில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

Image Source: Freepik

Read Next

Avocado Substitute: அவகோடாவுக்கு பதில் இதை ட்ரை பண்ணி பாருங்க!

Disclaimer