$
Can Diabetic Patients Eat Custard Apple: சீத்தாபழ மரங்கள் மலைகள், சரிவுகள் மற்றும் வளைவுகளில் எளிதாக வளரும். சிறு குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் அவை மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த பழங்கள் பருவகாலமாக கிடைப்பதால், இதில் பல சத்துக்கள் உள்ளன. வைட்டமின் பி6 மற்றும் கால்சியம் உள்ளது. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இது குறித்து விரிவாக காண்போம்.

சுகர் உள்ளவர்கள் சீத்தாப்பழம் சாப்பிடக்கூடாதா? (can diabetics eat custard apple)
இன்றைய காலகட்டத்தில் பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைத்து வயதினருக்கும் சர்க்கரை நோய் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. நீரிழிவு நோய் 30 வயதிற்குட்பட்டவர்களையும் பாதிக்கலாம். பிஸியான வாழ்க்கையால் மாறிவிட்ட உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே இந்த சர்க்கரை நோய்க்கு காரணம். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அந்த வகையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீத்தாப்பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்.
சீத்தாப்பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏனெனில் இதன் கிளைசெமிக் குறியீட்டு எண் 54. இதில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் குளுக்கோஸை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை அளவோடு சாப்பிடலாம். இது வீக்கத்தைக் குறைப்பதோடு, இதயத்துக்கும் நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின்-ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும் இதில் உள்ள நியாசின், கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
இதையும் படிங்க: சீத்தா பழ பிரியர்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? உஷார்..
சீத்தாப்பழத்தின் நன்மைகள் (Custard Apple Benefits):
சீத்தாப்பழத்தில் பாலிஃபீனாலிக் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை பெரிதும் அதிகரிக்கின்றன. இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.
அதுமட்டுமல்லாமல், சீத்தாப்பழத்தில் உள்ள புலாடாசின் மற்றும் அசிமிசின் என்ற ஃபிளாவனாய்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், அல்கலாய்டுகள் மற்றும் அசிட்டோஜெனின்கள் சிறுநீரக நோய்களைக் குறைக்கின்றன என்றும் ஆராய்ச்சிகள் கூறிகின்றன.
மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்த சீதாப்பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. எனவே இந்த பழம் மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது. சரும பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாகும்.

சுகர் உள்ளவர்களுக்கு சீத்தாப்பழத்தின் பக்கவிளைவுகள்:
100 கிராம் சீதாப்பழத்தில் 20 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. அதனால் இன்சுலின் உற்பத்தியை பாதிக்கிறது. மேலும் இதில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து மறைமுகமாக இன்சுலின் உற்பத்தியை பாதிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
Image Source: Freepik