$
Brown Sugar For Diabetes: இன்று சிறியவர்கள், பெரியவர்கள் என வித்தியாசம் பாராமல் அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான நோய்களில் ஒன்றாகவே சர்க்கரை நோய் உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். உணவில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளும் சர்க்கரை, இன்சுலின் என்ற ஹார்மோன் மூலம் உடலில் உள்ள செல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாத போது அல்லது இன்சுலின் சரியாகப் பயன்படுத்தாத போது நீரிழிவு நோய் பிரச்சனை ஏற்படலாம்.
இந்நிலையில் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். இந்த அதிகரித்த சர்க்கரை அளவு எடை அதிகரிப்பு, சிறுநீரக பாதிப்பு, இதய நோய் மற்றும் கண் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். நீரிழிவு நோயாளிகள் செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்வது உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Jackfruit For Diabetes: சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பலாப்பழம். எப்படி சாப்பிடணும் தெரியுமா?
நீரிழிவு நோயின் வகைகள்
டைப் 1 நீரிழிவு நோய்
இந்த வகை நீரிழிவு நோய் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தால் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் அழிக்கப்படுகிறது.
டைப் 2 நீரிழிவு நோய்
கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் ஹார்மோனை உடல் பயன்படுத்த முடியாத போது இந்த வகை நீரிழிவு நோய் பிரச்சனை ஏற்படுகிறது.
டைப் 1 நீரிழிவு நோயை விட, டைப் 2 மிகவும் பொதுவானதாகும். இவை சரியாக நிர்வகிக்கப்படாத போது கடுமையான உடல்நல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். மேலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Drinks For Diabetics: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு குறைய காலையில் இந்த ஜூஸ் குடிங்க
நீரிழிவு நோயாளிகளுக்கு நாட்டுச் சர்க்கரை
பெரும்பாலானோர் செயற்கை இனிப்புகளைத் தவிர்த்து இயற்கை இனிப்புகளைப் பரிந்துரை செய்து எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு நாட்டுச் சர்க்கரை என்ன வகையான விளைவுகளைத் தருகிறது என்பது குறித்து காண்போம். நீரிழிவு நோயாளிகள் பலரும் வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, இயற்கை இனிப்பான நாட்டுச் சர்க்கரையை நாடிச் செல்கின்றனர். வெள்ளை சர்க்கரை ஆபத்தாக இருப்பினும், நாட்டுச் சர்க்கரையை எடுத்துக் கொள்வது நல்லது என்றும் கூற முடியாது.
நாட்டு சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரை இரண்டிலுமே கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இதில் நாட்டுச் சர்க்கரையில் இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை காணப்படுகிறது. அதே சமயம், இந்த ஊட்டச்சத்துக்களின் அளவு மிகக் குறைவே ஆகும். வெள்ளை சர்க்கரை பல்வேறு தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது. அதே போல, நாட்டுச் சர்க்கரையிலும் உண்மையான ஆரோக்கிய நன்மைகள் எதுவுமில்லை.
இயற்கையாகவே நம் உடலில் கார்ப்ஸ் மற்றும் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. எனவே, தனியாக இயற்கை இனிப்பை சர்க்கரை நோயாளிகள் எடுக்கக் கூடாது. மேலும் வெல்லத்தில் 84.4 உயர் கிளைசெமிக் குறியீடு இருப்பதால், இதை சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். செயற்கை இனிப்பை விட, இயற்கை இனிப்பு சிறந்தது எனினும், இது சர்க்கரை நோயாளிகளுக்கு பொருந்தாது. வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை என எதுவாக இருப்பினும் மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவைக் கண்காணிப்பதுடன், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்த உணவுத் திட்டத்தைக் கடைபிடிப்பது மிகவும் சிறந்தது. இத்துடன், அன்றாட வாழ்க்கையில் வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வது, எடை கண்காணிப்பு, நல்ல தூக்கம் போன்றவற்றின் மூலம் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Sugar Alternatives: சுகர் ஃப்ரீ எதுக்கு?… வெள்ளை சர்க்கரைக்கு பதிலா இவற்றை பயன்படுத்துங்க!
Image Source: Freepik