Dairy Products To Eat And Avoid For Heart Health: இன்றைய நவீன காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் பலரும் உடல்நலப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இதய ஆரோக்கியத்திற்கு பால் பொருள்கள் உதவுகின்றன. சமச்சீரான உணவில் பால் பொருள்கள் சேர்த்துக் கொள்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பால் பொருள்களில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் டி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இந்த ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பங்கு வகிக்கிறது. இவை வயதாகும் போது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனினும் இதய நோயாளிகள் பால் பொருள்கள் எடுத்துக் கொள்வதில் சிறப்பு கவனம் தேவை.
இந்த பதிவும் உதவலாம்: Intermittent Fasting: மக்களே உஷார்!! அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பது இதய நோய் ஆபத்தை அதிகரிக்குமாம்!
இதய ஆரோக்கியத்திற்கு பால் பொருள்கள்
பால் பொருள்களில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளதால், இவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. முழு கொழுப்பு நிறைந்த பால் பொருள்கள் இதய நோய் உள்ளவர்களுக்கு இருதய சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
எனினும் பால் பொருள்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனினும், இவற்றை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. அதன் படி, குறைந்த கொழுப்பு கொண்ட பால், பச்சை தயிர், பாலாடைக்கட்டி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம், முழு கொழுப்பு நிறைந்த பால், கிரீம் சீஸ் போன்றவை எப்போதும் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பிற நிறைவுற்ற கொழுப்புகளுக்கு மாற்றாக நட்ஸ், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற நிறைவுறா கொழுப்பு போன்றவற்றை உணவில் சேர்க்கலாம்.
இதய நோயாளிகளுக்கு உதவும் பால் பொருள்கள்
இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும். ஏனெனில், நிறைவுறா கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவை இதய ஆபத்தை அதிகரிக்கலாம்.
குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பற்ற பால்
குறைந்தளவு கொழுப்பு கொண்ட கொழுப்பு முற்றிலும் நீக்கப்பட்ட பாலை இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். குறைந்த நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கத்துடன் பால் பொருள்கள் எடுத்துக் கொள்வது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி
குறைந்த அளவிலான கொழுப்பு கொண்ட பாலாடைக்கட்டி மிதமான நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கத்துடன் கூடிய பால் என்பதால் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எனினும் இதில் கலோரி அடர்த்தி அதிகம் இருப்பதால், பகுதிக்கட்டுப்பாடு முக்கியமானதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Health Juices: இதய ஆரோக்கியத்துக்கு நீங்க குடிக்க வேண்டிய சுவையான ஜூஸ் வகைகள்
குறைந்த கொழுப்பு கொண்ட தயிர்
குறைந்தளவு கொழுப்புள்ள தயிர் குறிப்பாக சர்க்கரை சேர்க்கப்படாதவை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கும் சிறந்த தேர்வாகும்.
கிரேக்க தயிர்
வழக்கமான தயிருடன் ஒப்பிடுகையில் கிரேக்க தயிர் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் உயர் புரதத்தைக் கொண்டுள்ளது. எனவே இது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
இதய நோயாளிகள் சாப்பிடக்கூடாத பால் பொருள்கள்
கிரீம் சீஸ்
நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த க்ரீம் சீஸை குறைவான அளவிலேயே உட்கொள்ள வேண்டும். கடின பாலாடைகள், அதிக நிறைவுற்ற கொழுப்பு கொண்டவற்றை இதய பாதிப்பு உள்ளவர்கள் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
முழு கொழுப்பு நிறைந்த பால்
முழு கொழுப்புள்ள பால் மற்றும் தயிர் வகைகள் உயர்ந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் கொண்டிருக்கும். இவை இதய அபாயங்களை மேலும் அதிகரிக்கலாம். எனவே இந்த வகை பால் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் இதய நோயாளிகள் சாப்பிடக் கூடிய மற்றும் சாப்பிட கூடாத பால் பொருள்கள் ஆகும். எனினும் பால் பொருள்கள் என்று வரும் போது மிதமான மற்றும் பகுதியைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Dehydration Causes: நீரிழப்பால் இதயத்துடிப்பு அதிகமாகுமா? நிபுணர் தரும் விளக்கம்
Image Source: Freepik