What Drink Is Good For Heart Health: ஆரோக்கியமற்ற உணவுமுறை, மோசமான வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆரோக்கியமான இதயத்திற்கு நல்ல சீரான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியமாகும். இதில் இதய ஆரோக்கியத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய சில சாறு வகைகளைக் காணலாம்.
இதய ஆரோக்கியத்திற்கு உதவும் சாறுகள்
பீட்ரூட் சாறு
அதிகப்படியான இரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். பீட்ரூட்டில் அதிகளவு நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. எனினும் சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது ஆக்சலேட் கொண்ட சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் பீட்ரூட் சாற்றை மிதமாக உட்கொள்வது அவசியமாகும்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Heart Health: இதய நோயாளிகளுக்கு எது நல்லது? பட்டர் அல்லது நெய்? நிபுணர்கள் கூறுவது இங்கே!
சிட்ரஸ் பழச்சாறு
இதய ஆரோக்கியத்திற்கு சிட்ரஸ் பழச்சாறு வகைகள் உதவுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். புதிய மற்றும் சுவையான திராட்சைப் பழம் அல்லது ஆரஞ்சு பழத்திலிருந்து தயார் செய்யப்படும் சாறு வகைகள் இதய ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது. மேலும் சிட்ரஸ் பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள், ஃபிளவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சிட்ரஸ் பழச்சாறுகள் ஆரோக்கியமானதாக இருப்பினும், இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
மாதுளை சாறு
ஆய்வு ஒன்றில் குறிப்பிட்ட படி, மாதுளைப் பழம் ஒரு பாலிபினால்கள் நிறைந்த பழமாகும். இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதன் பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் குறைக்க உதவுகிறது. இவை இரண்டுமே இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளாகும்.
தக்காளி சாறு
இதய ஆரோக்கியத்திற்கு உதவும் சாறு வகைகளில் தக்காளி சாறு வகையும் அடங்கும். தக்காளி சாற்றை அருந்துவது உடலில் எல்டிஎல் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இந்த சாற்றில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு எல்டிஎல் கொழுப்பின் அளவு மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Heart Healthy Foods: இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சூப்பர் ஃபுட்ஸ்.!
பச்சை இலை காய்கறி சாறு
உடல் ஆரோக்கியத்திற்கான பானங்களில் பச்சை இலை காய்கறி சாறும் அடங்கும். இவை இதய ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் அமையக்கூடிய ஆரோக்கியமான கலவையைத் தயார் செய்யலாம். இந்த சாறு வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடல் வீக்கத்தைக் குறைப்பதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு இந்த பழச்சாறுகள் ஆரோக்கியமானவையாக இருப்பினும், இதய பராமரிப்புக்கான மற்ற முறைகளையும் கையாள்வது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: இதய பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் தண்ணீர் குடிக்கக் கூடாதாம். ஏன் தெரியுமா.?
Image Source: Freepik