நாம் தினமும் சாப்பிடும் பல உணவுகள் ஆரோக்கியமானவை என்று நினைப்பது வழக்கம். ஆனால், அவை இதயத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கக்கூடும்" என்று இதயநோய் நிபுணரும், இதய துல்லிய மருத்துவ இயக்குநருமான டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், ஒரு இதய நிபுணராக 20 ஆண்டுகளில் ஒருபோதும் வாங்காத 10 உணவுகள் பட்டியலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏன் இவை இதயத்துக்கு தீங்கு?
டாக்டர் சஞ்சய் கூறுகையில், "லேபிளில் ஆரோக்கியமானதாகத் தெரிவது எப்போதும் இதயத்திற்கு நல்லது அல்ல. வீக்கம், சர்க்கரை உயர்வு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை எல்லாம் குப்பை உணவுகளிலிருந்து மட்டும் அல்ல – தினசரி நாம் வாங்கும் சில ‘ஆரோக்கிய உணவுகளிலிருந்தும்’ வருகிறது" என்றார்.
இதய ஆரோக்கியத்திற்காக மருத்துவர் தவிர்க்க சொன்ன உணவுகள்
நீலக்கத்தாழை சிரப் (Agave Syrup)
ஆரோக்கியமான சர்க்கரை மாற்றாக விற்பனை செய்யப்படும் இது, உண்மையில் ட்ரைகிளிசரைட்களை (Triglycerides) விரைவாக அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated Fats) இதய தமனிகளை அடைத்து பாதிக்கக்கூடும்.
கடையில் வாங்கும் கிரானோலா (Store-bought Granola)
ஆரோக்கிய உணவாக தோன்றினாலும், இது பெரும்பாலும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட சர்க்கரை கொண்டதாக இருக்கும்.
முழு கோதுமை ரொட்டி (Whole Wheat Bread)
பெயர் முழு கோதுமை என்றாலும், உண்மையில் சேர்க்கைகள் நிறைந்த பழுப்பு நிற வெள்ளை ரொட்டி மாதிரியே இருக்கும்.
சுவையூட்டப்பட்ட கிரேக்க தயிர் (Flavored Greek Yogurt)
அதில் உள்ள அதிக புரதம் ஆரோக்கியமானது போல தோன்றினாலும், மறைந்து இருக்கும் சர்க்கரை அளவு இதயத்திற்கு அபாயகரமானது.
தாவர அடிப்படையிலான இறைச்சி (Plant-based Meat Alternatives)
இவை பெரும்பாலும் விதை எண்ணெய்கள், சோடியம், சேர்க்கைகள் போன்றவற்றால் நிரம்பியிருக்கும் – இதயத்திற்கு நல்லது அல்ல.
ரய்ஸ் கேக் (Rice Cakes)
இது அதிக கிளைசெமிக் குறியீடு (High Glycemic Index) கொண்டது. அதாவது, இரத்த சர்க்கரையை திடீரென உயர்த்தும்.
பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ் (Bottled Green Juice)
ஆரோக்கியமான Green Juice போல தோன்றினாலும், உண்மையில் இது ‘fructose bomb’ என்கிறார் மருத்துவர்.
"இயற்கை சுவை" கொண்ட மின்னும் நீர் (Flavored Sparkling Water)
அதன் பெயர் இயற்கை சுவை என்றாலும், செயற்கை இரசாயனங்கள் மற்றும் அமிலங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
பசையமில்லாத பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ் (Gluten-free Packaged Snacks)
ஆரோக்கியமாக விற்பனை செய்யப்படும் இவை, உண்மையில் எரிச்சல் தரும் சேர்க்கைகள் நிறைந்தவை.
View this post on Instagram
எச்சரிக்கை
"இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது – உணவின் லேபிளை மட்டும் நம்பாமல், அதன் உண்மையான உள்ளடக்கத்தை கவனிப்பதே. எளிய வீட்டுச்சமையல் தான் இதயத்தை பாதுகாக்கும் ரகசியம்" என்று டாக்டர் சஞ்சய் வலியுறுத்துகிறார்.