Avoiding Foods: உடல் ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிடக் கூடாத உணவுகள்! WHO-ன் எச்சரிக்கை

  • SHARE
  • FOLLOW
Avoiding Foods: உடல் ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிடக் கூடாத உணவுகள்! WHO-ன் எச்சரிக்கை

இன்றைய காலகட்டத்தில் ஒட்டுமொத்த உடல் மற்றும் மனநலத்தை பேணிக்காக்க உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளுக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியமாகும். எனினும், நாம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற உணவு விருப்பங்களால் சூழப்பட்டு, சிறந்த சுவை கொண்ட உணவைத் தேர்ந்தெடுத்தாலும், சமச்சீரான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவில் ஈடுபடுவது முக்கியமாகும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த அன்றாட உணவில் நாம் தவிர்க்க அல்லது மிதமாக உட்கொள்ள வேண்டிய சில உணவுகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமிலத்தைக் குறைத்து கீல்வாதத்தைத் தடுக்கும் சூப்பர் காலை உணவுகள் இதோ!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை

இன்று அனைவரும் விரும்பி தினமும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை ஆரோக்கியமற்ற தேர்வாக அமைகிறது. இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கான மிக முக்கியமான காரணங்களில் மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது. இது தவிர, உடலில் மிக முக்கிய உறுப்புகளான கணையம், கல்லீரல் கணையம் மற்றும் செரிமான அமைப்பு போன்றவற்றில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை மிதமான அளவில் உட்கொள்வதன் மூலம் நன்மை பெறலாம்.

பாஸ்தா மற்றும் ரொட்டி

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் ஆரோக்கியமற்ற உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில், வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் சர்க்கரை தின்பண்டங்கள் போன்றவற்றில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த வகை உணவுகளை உட்கொள்வது இன்சுலின் அளவை அதிகரிப்பதுடன், இரத்த சர்க்கரை அதிகரிக்கக் காரணமாகிறது. இதனைத் தவிர்க்க சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைத் தவிர்த்து, முழு தானியங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதன் படி, பார்லி, தினை மற்றும் பழுப்பு அரிசி போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பாமாயில்

அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக் கொள்ளும் பாமாயில் போன்ற அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் இதய நோய்கள் மற்றும் இன்னும் பிற நாள்பட்ட சுகாதார நிலைமைகளுக்கு பங்களிக்கிறது. மேலும் இதில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளதால் பாமாயில் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Drink Water While Eating: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

உருளைக்கிழங்கு சிப்ஸ்

மைக்ரோவேவ் பாப்கார்ன், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். இது சோடியம் நிறைந்த உணவுகளாகவும், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் அதிக கலோரிகள் மிகுந்த உணவுகளாகும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளைத் தருகிறது.

உப்பு

உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் உப்பு உடலின் திரவ சமநிலையை சீராக்கவும், இதய தாளத்தை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் இது தசை சுருக்கம் மற்றும் நரம்பு தூண்டுதல்களை நடத்த உதவும் தேவையான ஊட்டச்சத்து ஆகும். அதே சமயம் அதிகளவு உப்பை உட்கொள்வது இதயம் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பதிவு செய்யப்பட்ட மற்றும் டின் செய்யப்பட்ட பொருட்கள், ஊறுகாய், இறைச்சி போன்ற சோடியம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளாக காலை உணவு தானியங்கள், பன்கள், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரிகள் மற்றும் பேக் செய்யப்பட்ட சூப்கள் மற்றும் சாஸ்கள் போன்றவை அடங்கும்.

சீஸ்

சீஸ் போன்ற முழு கொழுப்புள்ள பால் பொருள்களில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கலாம். இந்த வகை உணவுகள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய் போன்றவற்றிற்கு பங்களிக்கிறது. இதற்கு மாற்றாக, சுவையற்ற மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

இந்த வகை உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கிறது. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இது போன்ற உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Calcium-Rich Foods: இரும்பு மாதிரியான எலும்பு வேணுமா? இவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!!

Image Source: Freepik

Read Next

தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டா இந்த பிரச்சனை வரவே வராதாம்!

Disclaimer

குறிச்சொற்கள்