How to stop overeating healthy food: உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் மேக்ரோநியூட்ரியண்ட்கள் நிறைந்த சத்தான உணவுகளைஉட்கொள்வது அவசியமாகும். ஆனால், இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை கூட அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சினைகள், அதிகப்படியான நுகர்வு ஏற்றத்தாழ்வுகள், மற்றும் இன்னும் பிற உடல் நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.
உதாரணமாக, அதிகப்படியான ஆரோக்கியமான கொழுப்புகள் கலோரி சுமையை ஏற்படுத்துகிறது. மேலும், அதிகப்படியான நார்ச்சத்துக்கள் வீக்கத்திற்கு வழிவகுக்கலாம். அதே போல, புரதத்தை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகங்களை கஷ்டப்படுத்துகிறது. எதிர்பாராத எதிர்மறை விளைவுகள் இல்லாமல் ஆரோக்கியமான உணவுகள் நன்மைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கு மிதமான தன்மை முக்கியமானதாகும். இதில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலைக் காணலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கும் ஆரோக்கியமான உணவுகள்
பழங்கள்
பொதுவாக பழங்கள் பல்வேறு ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவையாகும். ஆனால், இதை அதிகப்படியாக உட்கொள்வது அதிலும் குறிப்பாக அதிக சர்க்கரை உள்ள பழங்கள், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து, அதிகப்படியான கலோரி உட்கொள்ளலுக்கு பங்களிக்கலாம். எனவே இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதற்கு காய்கறிகள் மற்றும் பிற முழு உணவுகளுடன் பழங்களைச் சமப்படுத்துவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Summer salad recipe: வெயிலில் உடலை ஜில்லுனு வைக்க தினமும் இந்த சாலட் சாப்பிடலாம்! நிபுணரின் அட்வைஸ்
குயினோவா
இது புரதம் நிறைந்த முழு தானிய வகையாகும். இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால், இது அடர்த்தியான கலோரிகளையும் கொண்டுள்ளது. குயினோவாவை அதிகம் உட்கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு பங்களிக்கலாம். இதன் சரியான பகுதி கட்டுப்பாட்டின் உதவியுடன், அதன் நன்மைகளை அதிகரிக்கலாம்.
நட்ஸ் வகைகள்
பொதுவாக நட்ஸ் வகைகளானது புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது. எனினும், இது கலோரிகள் நிறைந்தவையாகும். அதாவது இதை அதிகப்படியாக உட்கொள்வது எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கலாம். ஒரு நாளைக்குப் போதுமான அளவு நட்ஸ் உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். இதை அதிகப்படியாக உட்கொள்வதால் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் போன்றவை செரிமான அசௌகரியத்திற்கு வழிவகுக்கலாம்.
டார்க் சாக்லேட்
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. ஆனால், இது கலோரி மற்றும் சர்க்கரையைக் கொண்டதாகும். இதை அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளலை அதிகரிப்பதற்கு வழிவகுக்கலாம். இது அதன் நன்மைகளை எதிர்க்கலாம்.
ஆலிவ் எண்ணெய்
இது இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். ஆனால், இது கலோரிகள் நிறைந்ததாகும். எனவே இதை அதிகமாக எடுத்துக் கொள்வது எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கலாம். இதை சாலட்களில் துவுவது அல்லது சமையலுக்கு மிதமாகப் பயன்படுத்துவது உடலுக்கு நன்மை பயக்கும். அதே சமயம், இதை அதிகம் உட்கொள்வது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Calcium rich fruits: பால் மட்டுமல்லாமல் இந்த பழங்களும் கால்சியம் நிறைந்தது தான்! இத கண்டிப்பா உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள்
சியா விதைகள், ஆளி விதைகள் இரண்டுமே உடலுக்கு நன்மை பயக்கும் விதைகளாகும். இந்த விதைகளில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. எனினும், சியா அல்லது ஆளி விதைகளிலிருந்து வரும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் வாயு, வீக்கம் மற்றும் செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
முட்டைகள்
இது புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சிறந்த மூலமாகும். ஆனால், இதன் அதிகப்படியான நுகர்வு, குறிப்பாக கொழுப்பு அதிகம் உள்ள நபர்களில் இது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே மிதமான அளவிலான முட்டையை எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதாகும். இதை அதிகமாக உட்கொள்வது உணர்திறன் உள்ள நபர்களில் கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும்.
கிரேக்க தயிர்
கிரேக்க தயிர் புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த சிறந்த மூலமாகும். ஆனால், சுவையூட்டப்பட்ட வகைகளில் பெரும்பாலும் கிரேக்க தயிரில் சர்க்கரைகள் சேர்க்கப்படுகிறது. சாதாரண கிரேக்க தயிரைக் கூட அதிகளவு உட்கொள்வது, அதன் லாக்டோஸ் உள்ளடக்கம் காரணமாக செரிமான அசௌகரியம் ஏற்படலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: தப்பித் தவறிக்கூட தர்பூசணி பழத்தோட இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க... ரொம்ப டேஞ்சர்...!
Image Source: Freepik