Summer salad recipe: வெயிலில் உடலை ஜில்லுனு வைக்க தினமும் இந்த சாலட் சாப்பிடலாம்! நிபுணரின் அட்வைஸ்

Nutritionist anjali mukerjee salad recipe: கோடைக்காலத்தில் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். அதன் படி, குறைந்த கலோரி அல்லது கலோரி இல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நன்மை பயக்கும். இதில் கோடைக்காலத்தில் ஆரோக்கியமான முறையில் சாலட்டைத் தயார் செய்யும் முறை குறித்து நிபுணர் பகிர்ந்ததைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Summer salad recipe: வெயிலில் உடலை ஜில்லுனு வைக்க தினமும் இந்த சாலட் சாப்பிடலாம்! நிபுணரின் அட்வைஸ்

Easy summer salad recipes in tamil: பொதுவாக, குறைந்த கலோரி உணவைத் தேட விரும்புபவர்கள் எவருக்கும் மனதில் முதலில் தோன்றும் விஷயம் சாலட்டைத் தேர்வு செய்கின்றனர். ஒவ்வொருவரும் தேர்வு செய்யக்கூடிய பல்வேறு வகையான சாலட் ரெசிபிகள் அதில் சேர்க்கப்படும் பொருட்கள், டாப்பிங்ஸ் மற்றும் சாஸ்கள் இருப்பதால், சாலட்டில் காணப்படும் கலோரிகளின் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் காணப்படும். அதே போல, தட்டில் பழங்களைச் சேர்ப்பது சாலட் எவ்வாறு ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கும் என்பது தெரியுமா?

அதன் படி, இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் அஞ்சலி முகர்ஜி யூடியூபர் மைரா வெண்டோலினின் ஆரோக்கியமான கோடைகால சாலட் செய்முறையைப் பகிர்ந்துள்ளார். இந்த ஆரோக்கியமான சாலட் ஆனது தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரிகள், வெள்ளரி போன்ற பழங்கள், காய்கறிகளைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. மேலும், இதில் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கலாம். இது தவிர, சிறிது சீஸ், புதிய புதினா போன்றவற்றைச் சேர்ப்பது கோடைக்கால பழ சாலட்டைத் தயார் செய்யும் முறை குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Chicken Salad Recipe: சட்டுன்னு உடல் எடையை குறைக்க உதவும் சிக்கன் சாலட் எப்படி செய்யணும் தெரியுமா?

கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய சம்மர் சாலட்

அஞ்சலி முகர்ஜி அவர்கள்,“நீரேற்றம், குளிர்ச்சி மற்றும் ஊட்டமளிக்கும் ஒரு சாலட் என்ற தலைப்பில் இன்ஸ்டகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது சுவையான உணவாக மட்டுமல்லாமல், ஆழ்ந்த ஊட்டமளிக்கும் உணவாகவும் அமைகிறது. அதில் அவர், @low.carb.love தளத்தில் உருவாக்கப்பட்ட புத்துணர்ச்சியூட்டும் கோடைகால சாலட்டைக் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். இது உடலுக்கு நீரேற்றம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சரியான கலவையாகும். இந்த சாலட்டைஏன் கோடைக்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களைக் குறித்து காணலாம்.

கோடைக்கால சம்மர் சாலட் தரும் நன்மைகள்

ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி சாலட் தயார் செய்ய பொருள்களின் நன்மைகளை எடுத்துரைத்துள்ளார். நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்களின் கூற்றுப்படி, கோடைக்காலத்தில் சாலட் செய்யப் பயன்படுத்தும் இந்தப் பொருள்கள் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

ஸ்ட்ராபெர்ரிகள்

ஸ்ட்ராபெர்ரிகள் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்களால் நிரம்பியதாகும். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. இவை வெப்ப வெளிப்பாட்டினால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வெள்ளரிக்காய்

கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய் உட்கொள்வது ஒரு ஆரோக்கியமான தேர்வாகும். இவை உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது வெப்பமான காலநிலையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதாக கூறியுள்ளார்.

புதினா

இது கோடைக்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு சிறந்த மூலிகையாகும். இது சாலட்டின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. மேலும், இது வயிறு உப்புசத்தைத் தடுப்பதுடன், உடலில் இயற்கையான குளிர்ச்சி விளைவைக் கொண்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Salad Benefits: தினமும் சாலட் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

தர்பூசணி

இது 92% தண்ணீரால் நிறைந்த பழமாகும். எனவே இது கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான நீரேற்றம் நிறைந்ததாகும். இது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இவை சருமஆரோக்கியத்தை ஆதரிக்கவும், சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான லைகோபீனை வழங்கவும் உதவுகிறது.

ஃபெட்டா சீஸ்

ஃபெட்டா சீஸ் குறித்து அஞ்சலி அவர்கள் கூறுகையில், இது கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த சிறந்த மூலமாகும். பழங்களின் இனிப்புக்கு ஒரு கசப்பான, உப்பு சமநிலையைச் சேர்க்கும்போது ஆற்றல் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

தேன்

தேன் ஒரு இயற்கையான ஆற்றல் ஊக்கியாக அமைகிறது. இவை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், விரைவான நீடித்த ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. இது வெப்பத்தின் போது உடலை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய்

ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியம், சரும நீரேற்றம் மற்றும் மூளை செயல்பாடு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.

எலுமிச்சை சாறு

இதில் சேர்க்கக் கூடிய எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக அமைகிறது. இது வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். எனவே இது வெப்பமான கோடை நாட்களில் நீரேற்றம், செரிமானம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: ஈவ்னிங் டைம் சாலட் சாப்பிடுபவர்களா நீங்க? முதலில் இத தெரிஞ்சிக்கோங்க

Image Source: Freepik

Read Next

கோடையை ஆரோக்கியமாக கடந்த போகணுமா.? அப்போ இந்த உணவில் இருந்து தள்ளி இருங்க..

Disclaimer