Salad Benefits: தினமும் சாலட் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Salad Benefits: தினமும் சாலட் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


Benefits of Salad: ஆரோக்கியமான உணவு முறைகளைக் கையாள்வது என்பது முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு ஏடுத்துக் கொள்ளும் உணவுகள் ஊட்டச்சத்து வாய்ந்ததாகவும், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பதாகவும் இருக்க வேண்டும். இந்த உணவுப் பழக்க முறைகளிலேயே சாலட்கள் அடங்கியுள்ளன. இது உடலுக்கு நன்மை தரக்கூடிய ஆரோக்கியமான தேர்வாகும். கோடை மற்றும் குளிர் காலத்தில் பழங்கள், காய்கறிகள் அடங்கிய சாலட்டை எடுத்துக் கொள்வது உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.

சாலட் சாப்பிடுவதற்கான காரணம்

பலதரப்பட்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளையும் பெற முடியும். இது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. பழங்கள், காய்கறிகள் மட்டுமல்லாமல் நட்ஸ் வகைகள் கொண்டும் சாலட்கள் உள்ளன. உடல் எடை குறைக்க உதவும் நபர்களுக்கு சாலட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!

தினந்தோறும் சாலட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அன்றாட வாழ்வில் தினந்தோறும் சாலட்களை சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். தினமும் சாலட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இதில் காண்போம்.

நீரேற்றத்தைத் தரும் சாலட்

காய்கறிகள் மற்றும் பழங்கள் இயற்கையாகவே நீரின் சிறந்த ஆதாரங்களாகக் கருதப்படுகிறது. காய்கறி வகைகளில், சில கீரைகள் 96% அளவு தண்ணீரைக் கொண்டிருக்கிறது. மேலும், பழ வகைகளில் ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி போன்ற பழங்கள் 92 சதவீதம் அளவிலான தண்ணீரைக் கொண்டுள்ளது. இவ்வாறு காய்கறிகள், பழங்கள் நிறைந்த சாலட்கள், உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கின்றன. திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, மாதுளை போன்றவையும் அதிக நீரை உள்ளடக்கிய பழ வகைகளாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

உடல் எடை குறைய

பொதுவாக சாலட், உடல் எடை குறைய விரும்புபவர்களுக்கு ஆரோக்கியமான காலை உணவாகும். சாலட்கள் உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது பசி உணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை உண்டாக்குகிறது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாலட் சாப்பிடும் போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள், தாதுக்கள் போன்றவை ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படுகின்றன. இவை உடலில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த ஆரோக்கியமான சாலட்டின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெற முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!

இதய ஆரோக்கியத்திற்கு

சாலட்டில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், போன்றவை உள்ளன. இத்துடன் போலேட்டும் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் பக்கவாதம், இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயைத் தடுக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தருவதுடன் சாலட்டில் உள்ள புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை உருவாக்குகின்றன. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, ஆரோக்கியமான உடலைத் தருகிறது. பழங்கள்,, விதைகளுடனான காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?

Image Source: Freepik

Read Next

மழைக்காலத்தில் எந்தெந்த காய்கறிகள் சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?

Disclaimer

குறிச்சொற்கள்