$
மழைக்காலத்தில் நோய் பரவல் என்பது அதிகமாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது என்பது புத்திசாலித்தனம். பருவமழையின் போது எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
மழைக்கால ஆரோக்கிய வழிமுறைகள்
மழைக்காலம் மிகவும் இனிமையானது. இந்த பருவத்தில், மக்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள் மற்றும் மிகவும் ரசிக்கிறார்கள். ஆனால் இந்த பருவத்தில் பல நோய்களும் வருகிறது. இந்த பருவத்தில் பாக்டீரியா தொற்று மிகவும் பொதுவானது. இதுமட்டுமின்றி, மழைக்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும், அதனால் சளி, இருமல் போன்றவை ஏற்படத் தொடங்கும். உண்மையில், இந்த பிரச்சினைகள் அனைத்தும் மோசமான உணவுப் பழக்கங்களால் ஏற்படத் தொடங்குகின்றன.
இதையும் படிங்க: இரவு உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 4 நார்ச்சத்து உணவுகள் இங்கே
ஆனால் மழைக்காலங்களில் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும், போதிய நோயெதிர்ப்பு சக்தியோடும் இருக்கலாம். இந்த பருவத்தில் நீங்கள் காய்கறிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்து ஆரோக்கியா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக், டயட்டீஷியன் டாக்டர். சுகீதா முத்ரேஜாவிடம் அளித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

மழைக்காலத்தில் எந்த காய்கறிகள் சாப்பிட வேண்டும்?
பாகற்காய்
பாகற்காய் சாப்பிடுவது மழைக்காலத்தில் நன்மை பயக்கும். பாகற்காயில் வைட்டமின் சி இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது. மழைக்காலத்தில் பாகற்காய் சாப்பிட்டு வந்தால், அது வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. பாகற்காய் செரிமான அமைப்பை மேம்படுத்தி பல நோய்களை குணப்படுத்துகிறது. எனவே, உங்கள் மழைக்கால உணவில் பாகற்காய் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சுரைக்காய்
நம்மில் பலர் சுரைக்காய் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் சுரைக்காய் காய்கறியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். குப்பி போன்ற இந்த காய்யில் வைட்டமின் பி, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். பருவமழைக் காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, செரிமானம் அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது. நீங்கள் பருவமழை காலத்தில் சுரைக்காய் காய்கறி அல்லது சாறு உட்கொள்ளலாம்.
பர்வல்
பர்வல் காய் பெரும்பாலும் வடஇந்திய உணவாக இருக்கிறது. இது தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக காணப்படுகிறது. பச்சை உருளைக்கிழங்கு என்று இதை அழைக்கப்படுகிறது.
மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க பர்வல் காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பர்வலில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பர்வல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, மழைக்காலத்தில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. பர்வல் காய்கறியை ரொட்டி அல்லது சாதத்துடன் சாப்பிடலாம்.
சீமை சுரைக்காய்
சீமை சுரைக்காயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. சீமை சுரைக்காய் நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் புரதத்தில் மிகவும் அதிகமாக உள்ளது. ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் இந்த வகை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பருவகால நோய்கள் வராமல் தடுக்க முடியும். இது மட்டுமின்றி, மழைக்காலத்தில் உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க விரும்பினால், சுரைக்காய் காய்கறிகளை சாப்பிடுவது ஒரு நல்ல வழி.
மழைக்காலத்தில் எந்த காய்கறிகளை சாப்பிடக் கூடாது?

மழைக்காலத்தில் பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கீரை, சாலட் அல்லது முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை இந்த பருவத்தில் உட்கொள்ளக்கூடாது. மழைக்காலத்தில் காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இந்த சீசனில் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது.
இதையும் படிங்க: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
மழைக்காலத்தில் பல ஆரோக்கிய நன்மைகளை கையாள வேண்டியது மிக அவசியம். சுகாதாரமான சுற்றுப்புற சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏதேனும் தீவிரத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik