Expert

எளிதில் எடையைக் குறைக்க நிபுணர் சொன்ன இந்த ரெசிபி செய்து சாப்பிடுங்க..

Is protein salad good for weight loss: அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இதில் எடையைக் குறைப்பதற்கும், ஆற்றலை மேம்படுத்தவும் உதவும் புரோட்டீன் சாலட் ரெசிபி தயார் செய்வது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
எளிதில் எடையைக் குறைக்க நிபுணர் சொன்ன இந்த ரெசிபி செய்து சாப்பிடுங்க..


Protein salad recipes weight loss recipe: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் மக்கள் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்நிலையில், உடல் பிரச்சனையைக் குறைக்க பலருமபலதரப்பட்ட முயற்சிகளைக் கையாள்கின்றன. இதில் உடல் எடையைக் குறைப்பதற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்றனர். இந்நிலையில், பசியைக் கட்டுப்படுத்துவதைத் தாண்டிய உணவுகளைத் தேடுகிறார்கள்.

புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளுக்கான தேவை சீராக அதிகரித்து வருகிறது. இதில் உடலை முழுமையாகவும், உற்சாகமாகவும் வைத்திருப்பதற்கு சீரான உணவை தேடுகிறீர்கள் எனில், அவர்களுக்கு உதவும் வகையில் எடமேம் & காட்டேஜ் சீஸ் சாலட் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இந்நிலையில் ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா சமீபத்தில் இந்த ஆரோக்கியமான, புரதம் நிறைந்த செய்முறையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது சுவையானது மட்டுமல்லாமல் சத்தான ரெசிபியாகவும் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஈவ்னிங் டைம் சாலட் சாப்பிடுபவர்களா நீங்க? முதலில் இத தெரிஞ்சிக்கோங்க

புரோட்டீன் நிறைந்த சாலட் ரெசிபி

சாலட் செய்ய தேவையான காய்கறிகள்

  • வெள்ளரிக்காய் - அரை கப்
  • கேரட் - அரை கப்
  • ஊதா முட்டைக்கோஸ் - அரை கப்
  • அவகேடோ துண்டுகள் - அரை கப்
  • குடை மிளகாய் - அரை கப்
  • எடமேம் - அரை கப்
  • டோஃபு/ பனீர் - 150 கிராம்

டிரஸ்ஸிங் செய்ய தேவையானவை

  • சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
  • ஸ்ரீராச்சா - 2 டீஸ்பூன்
  • வினிகர் - 1 டீஸ்பூன்
  • சர்க்கரை/ ஒரு சிட்டிகை ஸ்டீவியா - 1 டீஸ்பூன்
  • ராஞ்ச்/ லைட் மயோ - 1 டீஸ்பூன்
  • எள் விதைகள் - 2 டீஸ்பூன்
  • உப்பு - 1 டீஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்: வெள்ளரிக்காய் நல்லது தான்.. ஆனா இதுகூட மட்டும் சாப்பிடாதீங்க.. ஆபத்து.!

புரோட்டீன் நிறைந்த சாலட் ரெசிபி செய்முறை

  • முதலில் ஒரு கிண்ணத்தில் டிரஸ்ஸிங்கிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் நன்கு கலக்க வேண்டும்.
  • பின்னர் ஒரு தனி சாலட் கிண்ணத்தில், அனைத்து காய்கறிகள், எடமேம் மற்றும் பாலாடைக்கட்டி அல்லது டோஃபு போன்றவற்றை ஒன்றாக இணைக்க வேண்டும்.
  • இதில் தயாரிக்கப்பட்ட டிரஸ்ஸிங்கையும் சேர்த்து, ஒன்றாகக் கலந்து குளிர்ச்சியாகப் பரிமாறலாம்.
  • இந்த வழிகளில் புரோட்டீன் சாலட் ரெசிபியைத் தயார் செய்ய நிபுணர் மல்ஹோத்ரா அவர்கள் பரிந்துரைக்கிறார்.

இந்த ரெசிபியின் சுவைகள் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, வாக பொருட்களைக் கிளறி, புத்துணர்ச்சியூட்டும், ஊட்டச்சத்து நிறைந்த உணவாக சாலட்டை குளிர்வித்து பரிமாற வேண்டும். இந்த எடமேம் மற்றும் பாலாடைக்கட்டி சாலட்டை எடுத்துக் கொள்வது எடை இழப்பு பயணத்தை வலுப்படுத்தவும், தசை வலிமையை வளர்க்கவும், நார்ச்சத்தை அதிகரிக்கவும் புரதம் நிறைந்த உணவாக நிபுணர் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Pooja Malhotra (@nutritionistpoojamalhotra)

நன்மைகள்

இந்த சாலட்டில் சேர்க்கப்படும் பொருள்கள் அனைத்தும் உடல் எடையிழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

வெள்ளரிக்காயில் குறைந்த கலோரிகள், அதிக நீர்ச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கேரட்டிலும் வெள்ளரிக்காயைப் போல குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. எனவே இந்த ரெசிபியை எடுத்துக் கொள்வதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: உணவுக்கு முன் சாலட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

அதிகப்படியான கொழுப்பை எரிக்க நிபுணர் சொன்ன இந்த 5 எளிய வழிகளைப் பின்பற்றுங்க

Disclaimer