What is gond katira and its benefits in summer: டிராககந்த் என்றழைக்கப்படும் ஒரு படிக் மூலிகை லோகோவீட் தாவரங்களின் சாற்றில் இருந்து பெறப்படும் ஒரு இயற்கையான பசையாகும். இது டிராககாந்த் கம் (Tragacanth gum ) அல்லது கோண்ட் கதிரா (Gond katira) என்றும் அழைக்கப்படுகிறது. இது இயற்கையாகவே முறுக்கப்பட்ட படிகங்களின் வடிவத்தில் வெளிப்படக்கூடியதாகும். இதை தண்ணீரில் கலக்கும் போது பெரிதாகிறது. ஆனால், இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அதிலும் குறிப்பாக, இது எவ்வாறு நீரேற்றத்திற்கு உதவும் என்பது பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.
கோண்ட் கதிரா
உண்மையில், கோண்ட் கதிரா உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு வகை உண்ணக்கூடிய பசை ஆகும். குறிப்பாக கோடை காலத்தில் கோண்ட் கதிரா உட்கொள்ளல் உடலுக்கு நீரேற்றத்துடன் பல வகையான பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் வகையில் அமைகிறது. இதை தண்ணீரில் கரைக்கும் போது, ஜெல்லி வடிவத்தை எடுக்கும் ஒளிஊடுருவக்கூடிய திட படிகங்களாகத் தோன்றுகிறது.
கோண்ட் கதிரா ஒரு சுவையோ, வாசனையோ இல்லாததாகும். ஆனால், இது கோடைக்காலத்தில் மட்டுமல்லாமல், குளிர்காலத்திலும் நன்மை பயக்கும் என்பது தெரியுமா? ஆம். இது கோடை வெப்பத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பத்தைத் தரவும் உதவுகிறது. இதில் கோடைக்காலத்தில் கோண்ட் கதிரா சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Almond Resin Payasam: இந்த கோடை வெப்பத்தில் சூடான அசத்தலான சுவையில் பாதாம் பிசின் பாயாசம் ரெடி!
கோடைக்காலத்தில் கோண்ட் கதிரா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடை மேலாண்மைக்கு
இது ஒரு இயற்கையான பசையாக இருப்பதால், தண்ணீரில் கரைந்து ஜெல்லி போல மாறுகிறது. இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து அதிக கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. இது பசியைக் குறைப்பதன் மூலம் எடை கட்டுப்பாட்டில் ஒரு சிறந்த உதவியாக அமைகிறது.
குளிரூட்டும் பண்புகள் நிறைந்த
தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) கூற்றுப்படி, கோண்ட் கதிரா இயற்கையாகவே குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கோடைக்கால உணவில் ஒரு சிறந்த கூடுதலாகும். இது உடலுக்கு நீரேற்றத்தைத் தரவும், கடுமையான வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. இது நம்மை ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக வைக்கிறது. இதை இரவு முழுவதும் ஊறவைத்து பின்னர் சாலட்கள், பானங்கள், இனிப்பு வகைகளில் சேர்த்து எடுத்துக் கொள்வது புத்துணர்ச்சியூட்டுவதாக அமைகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
கோண்ட் கதிராவை சாப்பிடுவதற்கான மற்றொரு காரணமாக, நன்மை பயக்கும் செரிமான அமைப்பு அடங்குகிறது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவும் சில நொதிகள் உள்ளது. கோடைக்காலத்தில் அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சினைகள் பொதுவானதாகும். இந்நிலையில் கோண்ட் கதிராவை அவ்வப்போது சாப்பிடுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Badam Pisin: மாதவிடாய் காலத்தில் பாதாம் பிசின் சாப்பிடுவது நல்லதா? நன்மைகள் இங்கே!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
கோண்ட் கதிராவில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை புண், தொண்டை, சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபட உதவுகிறது. கோண்ட் கதிராவில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் கோடைக்காலத்தில் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு
கோண்ட் கதிரா ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம் கொண்டதாகும். கோடைக்காலத்தில் சருமம் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப வெடிப்புகள் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்நிலையில் கோண்ட் கதிராவை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கலாம். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதால், சருமத்தை ஊட்டமளித்து இயற்கையான பளபளப்பைத் தருகிறது. கோந்து கதிராவின் குளிர்ச்சியான பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்ற உதவுகிறது.
இவ்வாறு பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் கோண்ட் கதிரா உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை வழங்குகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Badam Pisin Benefits: மழைக்காலத்தில் பாதாம் பிசின் சாப்பிடலாமா? நன்மை தீமைகள் இங்கே!
Image Source: Freepik