Health risks of reheating foods: இந்திய வீடுகளில் பலரும் எஞ்சிய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்கின்றனர். ஆனால் அனைத்து உணவுகளையும் மீண்டும் சூடுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், சில உணவுகளின் அமைப்பு மாறக்கூடியதாகும். ஆம், உண்மையில் சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவதன் காரணமாக, அதன் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடலாம். மேலும் சில உணவுகள் செரிமானத்தைக் கூட பாதிக்கலாம். இது சுவை மட்டுமல்லாமல் வயிற்று மற்றும் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இதில் மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்க்கக்கூடிய தினசரி உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத ஆரோக்கியமான உணவுகள்
அரிசி
சாதாரண அரிசி தீங்கற்றதாகத் தெரிந்தாலும், இதை சமைத்தவுடன் சரியாக சேமிக்கப்படாவிட்டால் அது பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுகிறது. ஏனெனில், மீண்டும் சூடுபடுத்துவது எப்போதும் இந்த பாக்டீரியாக்களை அழிக்காது. குறிப்பாக அரிசியை அதிக நேரம் வெளியே வைத்திருந்தால் பாக்டீரியாக்களை அழிக்க முடியாது.
இதனால், உணவு விஷமாக மாறுவதுடன், வயிற்று உபாதைக்கு வழிவகுக்கலாம். எனவே அரிசியை மீண்டும் சூடாக்க வேண்டும் எனில், அறை வெப்பநிலையில் வெளியே வைத்தவுடன், அதில் உள்ள பாக்டீரியாக்கள் பெருகி, சாப்பிடும்போது உணவு விஷத்தை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Reheated Tea: ஆறிப்போன டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பதால் அசிடிட்டி & கல்லீரல் பாதிப்பு வருமா?
முக்கிய கட்டுரைகள்
கீரை
பாலக் கீரையில் இரும்புச்சத்துக்கள் மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. ஆனால், சமைத்த கீரையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், இயற்கையாகவே கிடைக்கும் நைட்ரேட்டுகள் ஜீரணிக்க கடினமான சேர்மங்களாக மாறுகிறது. இதை அதிகம் சாப்பிட்டால் கூட தீங்கு விளைவிக்கலாம். எனவே கீரையைப் புதிதாக சமைப்பது அல்லது அறை வெப்பநிலையில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
முட்டைகள்
துருவிய, வேகவைத்த அல்லது வறுக்கப்பட்ட முட்டைகள் புரதச்சத்து நிறைந்தவையாகும். இதை புதிதாக சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இவற்றை மீண்டும் சூடுபடுத்துவதால், அதன் புரத அமைப்பை மாற்றி, அவை ரப்பர் போன்றதாகவும், ஜீரணிக்க கடினமாகவும் மாறலாம். இது அதன் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கலாம். எனவே இதை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை மட்டும் உறுதி செய்ய வேண்டும்.
சமைத்த முட்டை அல்லது வேகவைத்த முட்டை மீண்டும் மீண்டும் வெப்பத்திற்கு ஆளாகும்போது கடுமையான தீங்கு விளைவிக்கலாம். இதை நீண்ட நேரம் வைத்திருந்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, இதை குளிர்ச்சியாக சாப்பிடலாம். ஏனெனில் அதிகளவிலான புரத உணவில் அதிக நைட்ரஜன் உள்ளது. இந்த நைட்ரஜன் மீண்டும் சூடுபடுத்துவதால் ஆக்ஸிஜனேற்றப்பட்டு, புற்றுநோயை மேலும் ஏற்படுத்தலாம்.
காளான்
காளான்களை சமைத்த உடனே சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். இவை புரதங்கள் மற்றும் தாராளமான அளவிலான தாதுக்களையும் கொண்டிருக்கிறது. இதை மீண்டும் சூடாக்குவதால், இந்த புரதங்களை மேலும் உடைத்து, செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இதை அடுத்த முறை சாப்பிட சேமித்து வைக்கக்கூடாது. இவற்றை சூடாக்குவதால் ஆக்ஸிஜனேற்றப்பட்ட நைட்ரஜன் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கொண்ட நச்சுக்களை உருவாக்குகிறது. அடுத்த நாளுக்கு காளான்களை சேமித்து வைப்பதாக இருப்பின், இதை குளிர்ச்சியாக சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Leftover Rice: சமைத்த சாதத்தை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்!
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை கறிகளாகவோ அல்லது உலர்ந்த சப்ஜியாகவோ மீண்டும் சூடுபடுத்துவதால், அதன் அமைப்பு மற்றும் சுவையை இழக்க நேரிடலாம். ஆனால், இதற்கு மாற்றாக அறை வெப்பநிலையில் சேமிக்கப்படும் சமைத்த உருளைக்கிழங்கை சூடுபடுத்துவதன் மூலம் எப்போதும் அழிக்கப்படாத பாக்டீரியாக்களை வளர்க்கலாம். இது வீக்கம் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கலாம். வீணாவதைத் தவிர்க்க மீதமுள்ள உருளைக்கிழங்கு உணவுகளை குளிர்ந்த சாட் அல்லது சாண்ட்விச்சாக மாற்றி சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கில் வைட்டமின் பி6, சி மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனினும், இதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால், அவை க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினத்தை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. சமைத்த உருளைக்கிழங்கை அறை வெப்பநிலையில் வைத்திருப்பினும், பாக்டீரியாக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. எனவே பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தவிர்க்க விரும்பினால், அதை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது அல்லது 1-2 நாட்களுக்குள் உட்கொள்ளாவிட்டால் அவற்றை தூக்கி எறிவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாத உணவுகள் இங்கே
Image Source: Freepik