Reheating Food Side Effects: சாப்பாடு மீந்து போச்சினு சூடு பண்ணி சாப்பிடுறீங்களா.? அய்யோ ஆபத்து.!

  • SHARE
  • FOLLOW
Reheating Food Side Effects: சாப்பாடு மீந்து போச்சினு சூடு பண்ணி சாப்பிடுறீங்களா.? அய்யோ ஆபத்து.!


ஆனால் உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம். சில உணவுகளை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஒரு உணவை நீங்கள் மீண்டும் மீண்டும் சூடு செய்வதால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் போய்விடும். அது மட்டுமல்லாமல், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை உருவாக்கும். நீங்கள் மீண்டும் சூடுபடுத்தக்கூடாத உணவுகள் என்னவென்று இங்கே காண்போம்.

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள் இங்கே…

டீ

டீ இல்லாமல் ஒரு நாள் நிறைவடையாது. சிலர் டீயை அவ்வப்போது போட்டு குடிப்பார்கள். ஆனால் சில வேலை காரணமாக ஒரே நேரத்தில் நாள் முழுவதிற்கும் தேவையான டீயை போட்டு வைத்து, தேவைபடும்போது மீண்டும் சூடுபடுத்தி குடிக்கிறார்கள். டீயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால், அதன் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனல் அஜீரண பிரச்னை ஏற்படும்.

சமையல் எண்ணெய்

ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடு செய்யக்கூடாது. சிலர் அப்பளம், வத்தல், பூரி, வடை, பலகாரம் செய்த எண்ணெயை, அடுத்த சமையலுக்காக பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடு செய்து பயன்படுத்துகிறார்கள். சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்குவது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அதிகரிக்கும்.

கீரை

கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் ஆக்சிஜனேற்றம் அதிகரித்து பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிக்கலாமா?

பீட்ரூட்

பீட்ரூட்டை மீண்டும் சூடுபடுத்துவது பீட்ரூட்டில் உள்ள நைட்ரைட்டுகளை தீங்கு விளைவிக்கும் நைட்ரைட்டுகளாக மாற்றுகிறது. இவற்றை சாப்பிடுவதால் வயிற்றில் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.

சாதம்

மீந்த சாதத்தை மீண்டும் சூடு செய்தால், பேசிலஸ் சீரஸ் போன்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இது பல வகையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியை மீண்டும் சூடுபடுத்துவதால் அதன் 97 சதவீத ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. மேலும் இதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை மீண்டும் சூடாக்குவது போட்யூலிசத்தை ஏற்படுத்தும். இது ஃபூட் பாய்சனை உருவாக்கும் பாக்டீரியாவை அதிகரிக்கும்.

காளான்

காளான்களை மீண்டும் சூடாக்குவது ஆபத்தானது. காளான்களை மீண்டும் சூடுபடுத்துவது நச்சு நுண்ணுயிரிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இருப்பிடமாக மாற்றும்.

முட்டை

முட்டையை மீண்டும் சூடு செய்யக்கூடாது. நீங்கள் மீண்டும் அதை சூடு செய்தால் மஞ்சள் கருவை ஆபத்தான பச்சை நிறமாக மாற்றி சளி பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பொதுவாக இரசாயனங்கள் மற்றும் பாதுகாப்புகள் உள்ளன. அவற்றை மீண்டும் சூடுபடுத்துவது உங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவாக மாறும்.

குறிப்பு

இந்த இணையதளத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சுகாதார தகவல்களும், மருத்துவ குறிப்புகளும் மற்றும் பரிந்துரைகளும் உங்கள் தகவலுக்காக மட்டுமே. ஆனால் இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Image Source: Freepik

Read Next

மாங்காய் vs மாம்பழம்: எது சிறந்தது தெரியுமா.?

Disclaimer

குறிச்சொற்கள்