Reheating Foods: பலரும் உணவுகளை வெவ்வேறு வகையாகவும், புதுப்புது விதமாக சமைக்கிறார்கள். புதிய உணவுகளை சமைத்து சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். வீட்டில் நபர்கள் குறைவாகவே இருந்தாலும் விதவிதமாக சமைத்து சாப்பிட ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படி சமைப்பது தவறில்லை என்றாலும் ருசியில் கவனம் செலுத்தி சமைக்கும் பலரும் அளவில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான்.
மாறிவரும் காலத்திற்கேற்ப, நவீனத்துவம் படிப்படியாக நம் வாழ்வில் இடம் பெறுகிறது. தற்போது வீடுகளிலும் அலுவலகங்களிலும் மைக்ரோவேவை சூடாக்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. மைக்ரோவேவில் உணவை சூடாக்குவது எளிது. ஒரு சிறப்பு வகை பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் உணவை வைப்பதன் மூலம், சில நொடிகளில் உடனடியாக சூடாக்க முடியும்.
அதேபோல் சிலர் வீட்டிலேயே அடுப்பில் வைத்து உணவை சூடாக்கி சாப்பிடுகிறார்கள். சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும்.
என்னென்ன உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது?

அரிசி
சமைக்கப்படாத அரிசியில் பேசிலஸ் செரியஸின் இருக்கும். அரிசியை சமைத்து அறை வெப்பநிலையில் விடும்போது, இந்த வித்திகள் பெருகும். அரிசியை மீண்டும் சூடாக்குவது இந்த பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நச்சுகளை அகற்றாது, இது உணவு நச்சு (ஃபுட் பாய்ஷன்) அபாயத்திற்கு வழிவகுக்கும்.
அரிசியை சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது அதில் பாக்டீரியாக்களில் உள்ள நுண் கிருமிகளின் உற்பத்தி பெருகும்.
சிக்கன்
சிக்கனை விரும்பி சாப்பிடுவதோடு அதில் நிறைய சத்துக்களையும் பெற முடியும். சிக்கனில் நிறைய புரதங்கள் இருக்கும் இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது இதில் கிடைக்கும் புரத விகிதம் அப்படியே குறைந்துவிடும்.
காளான்
காளான் இதயத்திற்கும் பெரும் நன்மை பயக்கும். இதில் பல புரதச்சத்து இருக்கிறது. காளானை முதல் சமையலிலேயே சமைத்து சாப்பிட வேண்டும். இரண்டாவது முறை சூடுபடுத்தி சாப்பிட்டால் இது உடல் செரிமானத்திற்கும், இதயத்திற்கும் ஆபத்து ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கான காரணம், இதில் புரத அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்படுவதே ஆகும்.
முட்டை
வேக வைத்த முட்டை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. முட்டை மீண்டும் சூடாக்கும் போது அதில் உள்ள நச்சுத்தன்மையில் பெரும் மாற்றம் ஏற்படும். இது செரிமான பாதையில் பிரச்சனையை ஏற்படுத்தும். முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது அதில் உள்ள புரத அமைப்பு முற்றிலும் சிதைந்து உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. இதை மீண்டும் சூடாக்கும் போது இது மிக ஆபத்தான டிரான்ஸ் கொழுப்புகளாக மாறும். எண்ணெய் கொதிநிலையில் அதிகம் மாற்றம் ஏற்படும் போது அது நச்சுத்தன்மையை உண்டாக்கும். இதனால் செரிமான பிரச்சனை உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும்.
கீரைகள்
கீரைகளில் நைட்ரேட்டுகள் உள்ளன, அவை மீண்டும் சூடுபடுத்தும்போது, நைட்ரைட்டுகள் மேலும் நைட்ரோசமைன்களாக மாறலாம், இவை பல்வேறு புற்றுநோய்களுடன் தொடர்புடைய சாத்தியமான கூறுகளாகும். இந்த அபாயத்தைக் குறைக்க, கீரை மற்றும் நைட்ரேட் நிறைந்த பிற காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தாமல் இருப்பது நல்லது.
Image Source: FreePik