Fri Sep 11, 2026 | 11:43 PM IST

Intermittent Fasting: மக்களே உஷார்!! அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பது இதய நோய் ஆபத்தை அதிகரிக்குமாம்!

What are the risk factors of intermittent fasting: மூன்றில் ஒருவர் எடை இழப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மட்டுமல்ல, டயட் என்ற பெயரில் கருமையான உண்ணாவிரதத்தையும் கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பாக, அடிக்கடி உண்ணாவிரதம் (Intermittent Fasting) இருப்பது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இது வேகமாக எடையை குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது. இதில் 24 மணி நேரத்தில், 16 மணிநேரம் உணவு ஏதும் சாப்பிடாமல், மீதம் உள்ள 8 மணி நேரம் மட்டுமே உணவு உண்பார்கள்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், Intermittent Fasting இதயத்தை கடுமையாக பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிகாகோ ஆய்வில், உணவு நேரத்தை ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமாக கட்டுப்படுத்துவது இதய நோய் தொடர்பான இறப்புக்கான 91% அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மூலம் இந்த ஆய்வு குறித்த ஒரு சுருக்கம் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்த முழுமையான ஆய்வின் முடிவில், உண்ணாவிரதம் இருப்பவர்களுடன் ஒப்பிடும் போது, உண்ணாவிரதம் இல்லாதவர்களுக்கும் இடையில் பல மாற்றம் உள்ளது.

இந்த பதிவும் உதவலாம் : Juicing for Healthy Heart: உங்க இதயம் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க தினமும் இந்த ஜூஸை குடியுங்க!!

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 20,000-க்கும் மேற்பட்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில், Intermittent Fasting ஐ கடைபிடித்தவர்களுக்கு இதய நோய்கான ஆபத்து அதிகமாக உள்ளது. 2003 முதல் 2019 வரையிலான இறப்பு விகிதங்களுக்கான காரணத்தை பற்றி ஆய்வு செய்யும் போது, இதில் பெரும்பாலானோர் இடைவிடாத உண்ணாவிரதத்தை கடைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் பாதி பேர் 48 வயதை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நோயாளிகள் தங்கள் இடைவிடாத உண்ணாவிரதத்தை (Intermittent Fasting) எவ்வளவு காலம் கடைப்பிடித்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவர்கள் செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் ஊகித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார். உண்ணாவிரதம் இருந்த நோயாளிகள் அதிக பிஎம்ஐ மற்றும் உணவு பாதுகாப்பற்ற இளைஞர்களாக இருந்தனர். அவர்களின் சொந்த அறிக்கைகளின்படி, அவர்களுக்கு இருதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை இருந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம் : Snoring and Heart Disease: குறட்டை விடுபவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

எனவே, உடல் எடையை குறைக்க நீங்கள் இவற்றை கடைபிடிப்பதற்கு பதில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். சரியான உடற்பயிற்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளாதாக இருக்கும். மருத்துவரை அணுகாமல் எந்த விதமான உடல் எடை இழப்பு டயட்களை எடுக்க வேண்டாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Juicing for Healthy Heart: உங்க இதயம் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க தினமும் இந்த ஜூஸை குடியுங்க!!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content