Flax Seeds For Diabetes: சர்க்கரை அளவு குறைய இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க போதும்

  • SHARE
  • FOLLOW
Flax Seeds For Diabetes: சர்க்கரை அளவு குறைய இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க போதும்

அந்த வகையில் சில ஆரோக்கியமான உணவுகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை நிர்வகிக்கலாம். அந்த வகையில் நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் ஆளிவிதைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நீரிழிவு நோய்க்கு ஆளிவிதைகளை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes and Sleep: எச்சரிக்கை! தூக்கமின்மையால் ஏற்படும் நீரிழிவு நோய், எப்படி தவிர்ப்பது?

ஆளிவிதைகளின் ஊட்டச்சத்துக்கள்

ஆளிவிதைகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் விதைகளாகும். இதில் இரும்பு, நார்ச்சத்து, புரதம், சோடியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆளிவிதைகள் உடலில் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. இதன் நுகர்வு செரிமான மண்டலம் வலுவடைவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீக்குகிறது.

நீண்ட கால இதய ஆரோக்கியத்திற்கும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்கவும் ஆளிவிதைகள் உதவுகின்றன. அதே சமயம் இந்த விதைகளை உட்கொள்வது எளிதில் சர்க்கரையை குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். ஆளிவிதைகளைக் கொண்டு உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க முடியும். இதில் ஆளிவிதைகளை எவ்வாறு உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க முடியும் என்பதைக் காணலாம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆளிவிதைகள் உட்கொள்ளும் முறை

ஆளிவிதை தூள்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆளிவிதை தூளை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு உணவுடன் 5 கிராம் அளவிலான ஆளிவிதை தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இவ்வாறு உண்பது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

ஆளிவிதை சாலட்

உடல் ஆரோக்கியத்திற்கு இன்று பலரும் சாலட் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 1-2 ஸ்பூன் ஆளிவிதைகளை முந்தைய நாள் இரவிலேயே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் காலையில் தண்ணீரை வடிகட்டி அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து சாலட் ஆக சாப்பிடலாம். இந்த சாலட்டில் உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்ப்பது சுவையைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: Vegetables For Diabetics: சர்க்கரை நோயாளிகள் கோடை காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!

ஆளிவிதை பால்

ஆளிவிதை கொண்டு தயார் செய்யப்படும் ஆளிவிதை பால் சுவையைத் தவிர, பல்வேறு உடல்நல ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதற்கு 1-2 தேக்கரண்டி ஆளி விதைகளை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு காலையில் தண்ணீரை அகற்றி அரைத்து கொள்ள வேண்டும். இந்த விழுதை தண்ணீரில் கலந்து பாலில் சேர்த்து அருந்தலாம். சர்க்கரை நோயாளிகளின் பிரச்சனைகளை நீக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இந்த பாலை அருந்தலாம்.

ரொட்டியில் ஆளிவிதை

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆளிவிதைகளை ரொட்டியில் கலந்து சாப்பிடலாம். இதற்கு ஆளி விதைகளை முதலில் குறைந்த தீயில் வறுக்க வேண்டும். பின் இதை நைசாக அரைத்து கோதுமை மாவில் கலந்து தண்ணீர் விட்டு மாவை பிசைய வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த ரொட்டியைக் கொடுப்பது, உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடலில் குளுக்கோஸ் அளவையும் கட்டுக்குள் வைக்க முடியும்.

இவ்வாறு நீரிழிவு நோயாளிகள் ஆளி விதைகளைப் பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும். இருப்பினும், நீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்கள் புதிதாக எந்தவொரு உணவையும் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Pulses For Diabetes: சர்க்கரை நோயாளிகள் எந்த பருப்பு உட்கொள்வது நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Kovakkai Benefits: கோவக்காய் உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா? டாக்டர் கூறுவது இங்கே!

Disclaimer