Immunity Boosting Tips For Sugar Patients: நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றாக பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தியும் ஒன்றாகும். ஏனெனில், சர்க்கரை நோயினால் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைகிறது. உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்தவுடன், நோய் தாக்கம் அதிகரிக்கலாம். இதனால் நல்ல நோயெதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்படலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருக்கும். அதிகப்படியான குளுக்கோஸ் அளவு நோயெதிர்ப்புச் செல்களை எதிர்மறையாக பாதிக்கிறது.
இதனால், நீரிழிவு நோயாளிகளும் இதய நோய், ஆஸ்துமா மற்றும் இன்னும் பிற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது கடினமான ஒன்றாக மாறிவிடும். நீரிழிவு நோயாளிகள் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவும் சில உதவிக்குறிப்புகள் குறித்து தபாட்டா ஃபிட்னஸின் மேலாளரான ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணர் பயல் அஸ்தானா அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Okra Water Benefits: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வெண்டைக்காய் தண்ணீர். எப்படி தெரியுமா?
நீரிழிவு நோயாளிகள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதற்கான வழிகள்
ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளுதல்
நீரிழிவு நோயாளிகள் தங்களது உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, பின்வரும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
- வைட்டமின் ஏ நிறைந்த பப்பாளி, முலாம்பழம், பூசணி
- வைட்டமின் சி உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பச்சை மிளகாய்
- வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த பாதாம், பூசணி விதைகள்
- வைட்டமின் டி நிறைந்த காளான்
- இரும்புச்சத்துக்கள் உள்ள கீரை, முழு தானியங்கள்
இந்த வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள்
சர்க்கரை நோயாளிகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் படி, வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். மேலும், பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், எடையைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, கொய்யாப்பழம், அன்னாச்சி போன்ற பருவகால பழங்களையும், பிளம்ஸ் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க காய்கறி சாறு உட்கொள்வது நன்மை தரும் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Child Diabetes Prevention: குழந்தை பருவ சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை
வீட்டிலேயே கட்டுப்படுத்துவது
- உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் மூலம், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். எனவே சர்க்கரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- மேலும், குளுக்கோஸ், மருந்துகள் போன்றவற்றின் அளவைக் கண்காணிக்க வேண்டும். இதற்கு மருத்துவரிடம் சென்று வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளலாம்.
- இது தவிர காய்ச்சல் மற்றும் இன்னும் பிற நோய்களுக்கு எதியாக தடுப்பூசி போடுவதை மறக்கக் கூடாது.
தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது
நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் தினந்தோறும் யோகா செய்யலாம். தினசரி வழக்கத்தில் 30 நிமிட நடை, யோகா மற்றும் பிற செயல்பாடுகளைச் சேர்க்க வேண்டும். நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த தினமும் செய்ய வேண்டிய பயிற்சிகள் சிலவற்றைக் காணலாம்.
- நோயெதிர்ப்புச் சக்திக்கு நீச்சல் ஒரு நல்ல பயிற்சியாகும். இந்த பயிற்சி செய்வதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
- யோகாசனங்களில் புஜங்காசனம், பலாசனம், சேது பந்தாசனம், ஹலாசனா போன்றவற்றை செய்வதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தலாம்.
- கிரிக்கெட், பூப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
எனினும் நீரிழிவு நோயுடன் இதய நோய் கொண்டவர்கள் அதிக தீவிர உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தத்தைக் குறைத்தல்
பொதுவாக அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி விரைவில் குறையும் என்பது தெரியுமா? உண்மை தான். அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. முழுமையடையாத தூக்க சுழற்சியைக் கொண்டிருப்பர். இதனால் காலை சுறுசுறுப்பாக உணர முடியாது. சோர்வு, பலவீனம், எரிச்சல் போன்றவை நோயெதிர்ப்புச் சக்தியை பலவீனப்படுத்துக்றது. எனவே நீரிழிவு நோயாளிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் சர்க்கரை நோயாளிகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cinnamon For Diabetes: சர்க்கரை நோயாளிகளே! இந்த பொக்கிஷத்தை மிஸ் பண்ணீடாதீங்க.
Image Source: Freepik