Tips To Prevent Childhood Diabetes: இன்று பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குழந்தைகளின் மத்தியில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. இதனைத் தவிர்க்க, ஆரம்ப காலத்திலேயே சில வழிமுறைகளைக் கையாளலாம். ஆரோக்கியமான பழக்கங்களை வளர்ப்பதற்கும், நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதும் அவசியம் ஆகும்.
இதில் குறிப்பாக, குழந்தைகள் வெளிப்புற விளையாட்டுகளை மேற்கொள்ளலாம். அதன் படி, அவர்களை உடல் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பது உடல் எடை பராமரிப்பு மற்றும் நிலையான இரத்த சர்க்கரை அளவு இரண்டையும் பாதுகாப்பதாக அமைகிறது. மேலும், ஆய்வு ஒன்றில் குறிப்பிட்ட படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கே நீரிழிவு நோய் இரட்டிப்பாக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் குழந்தைகளுக்கு சில அத்தியாவசியமான பழக்க வழக்கங்களைக் கையாள வேண்டும்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Hand Symptoms: உங்க கைகளில் இந்த அறிகுறிகள் இருக்கா? இது நீரிழிவு நோயாக இருக்கலாம்.
குழந்தை சர்க்கரை நோய் கட்டுக்குள் வர உதவும் வழிகள்
இதில் உள்ள சில வழிகளின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோயிலிருந்து தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.
விளையாட வைப்பது
குழந்தைகளை வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். வெளிப்புற விளையாட்டுகளை விளையாட வைப்பதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதுடன், நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கலாம். இது அவர்களின் ஒட்டு மொத்த நல்வாழ்விற்கும் உதவும்.
உணவை கவனமாக எடுத்துக் கொள்வது
தொலைக்காட்சி, மொபைல் போன்ற நவீன கவனச் சிதறல்களால் அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்ளலாம். நீண்ட கால ஆரோக்கியமான பழக்கங்களை வளர்ப்பது, பகுதிக் கட்டுப்பாடு மற்றும் கவனத்துடன் சாப்பாடு எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றின் கொள்கைகளை குழந்தைகளுக்குக் கற்பிப்பது முக்கியமானதாகும்.
சமச்சீர் உணவு கட்டுப்பாடு
ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய தளமாக அமைவது நன்கு சமநிலையான உணவை எடுத்துக் கொள்வதாகும். இதன் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்குக் கற்பிப்பது மிகவும் முக்கியமானதாகும். இதனுடன், குழந்தைகளின் உணவில் காய்கறிகள், முழு தானியங்களைச் சேர்க்கலாம். அதே சமயம், சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள், பானங்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Types 1 Diabetes: டைப் 1 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் இத ஃபாலோ பண்ணுங்க
விழிப்புணர்வு ஏற்படுத்துவது
முன்னதாகவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப ஆதரவைத் தரும் வகையிலான சூழ்நிலையை அமைக்க வேண்டும். மேலும், நீரிழிவு மேலாண்மை குறித்த முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது
சத்தான உணவை வழங்குவது மற்றும் ஆரோக்கியமற்ற துரித உணவைத் தவிர்ப்பது மற்றும் உடல் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிப்பது போன்றவற்றில் பங்கு வகிக்க வேண்டும். ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதாக அமைகிறது.
முன்கூட்டியே கண்டறிதல்
குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பதை வழக்கமான பரிசோதனைகள் மற்றும் நீரிழிவு சோதனைகளின் மூலம் முன்கூட்டியே அறிகுறிகளைக் கண்டறியலாம். குழந்தை பருவ சர்க்கரை நோயினை சரியான நேரத்தில் கண்டறிவது மற்றும் பயனுள்ள தடுப்புக்கு முக்கியத்துவத்தை வலியுறுத்துவது முக்கியமானதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Juices For Diabetes: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த காய்கறி சாறுகளை குடிக்கலாம்
Image Source: Freepik