Sat Sep 12, 2026 | 12:45 AM IST

Diabetes Hand Symptoms: உங்க கைகளில் இந்த அறிகுறிகள் இருக்கா? இது நீரிழிவு நோயாக இருக்கலாம்.

Signs Of Diabetes In Hands: இன்று பலரும் சந்திக்கக் கூடிய பொதுவான நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோயும் உள்ளது. இது மிகவும் தீவிரமான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறி அதிகமாகலாம். இதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை வகை 1 நீரிழிவு நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் ஆகும். இதில் டைப் 1 நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட குறைவாக இருக்கும். இது குறைந்த இரத்த சர்க்கரை என அழைக்கப்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயில் ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும். இது உயர் இரத்த சர்க்கரை எனப்படுகிறது.

இந்த இரண்டு நிலைகளுமே மிகவும் தீவிரமானவையாகும். இது பல்வேறு பிரச்சனைகளைத் தரக்கூடியதாக அமைகிறது. இது இதய நோய் ஆபத்தை அதிகரிக்கிறது. மேலும் பலவீனமான பார்வை, கால்களில் கொப்புளங்கள், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, உடல் எடை இழப்பு போன்றவை ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Tips for Diabetes : சர்க்கரை நோயாளிகள் ஆர்ட்டிஃபிஷியல் சுகர் உட்கொள்வது நல்லதா?

நீரிழிவு நோய் அறிகுறிகள்

நீரிழிவு நோய் இருப்பின், உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றும். குறிப்பாக, உடலின் பல்வேறு பாகங்களிலும் இந்த அறிகுறிகள் தோன்றலாம். அதன் படி, கைகளில் நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம். இந்த அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம், நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

கைகளில் நீரிழிவு நோய் அறிகுறிகள்

நீரிழிவு நோய் ஏற்படுவதால் கைகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.

  • கைகளின் பின்பகுதியில் தோல் கடினமாவதுடன், மெழுகு போன்ற அமைப்பு உருவாகலாம்.
  • விரல்கள் கடினமாகி, நகர்த்துவதில் சிரமம் ஏற்படலாம்.
  • கைகளில் உணர்வின்மை மற்றும் முள் குத்துதல் உணர்வு ஏற்படுவது
  • கைகளில் தோல் கடினமாக மற்றும் வீக்கமாக மாறலாம்.
  • கைகளில் இருந்து தோள்பட்டைக்கு வீக்கம் பரவுதல்

இவை அனைத்தும் நீரிழிவு நோய் ஏற்படும் போது கைகளில் தோன்றும் அறிகுறிகளாகும்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்

நீரிழிவு நோய் தடுக்கும் வழிகள்

இது போன்ற அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், நீரிழிவு நோயைத் தடுக்கலாம்.

  • வழக்கமான யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுதல்
  • ஆரோக்கியமான, சீரான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுதல்
  • அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுதல்
  • வறுத்த, காரமான மற்றும் மிகவும் இனிப்பான உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தல்
  • உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பாதுகாத்தல். எனவே தினமும் காலை அல்லது மாலை 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் நிற்பதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டை நீக்கலாம்.

மேலே கூறப்பட்ட, நீரிழிவு நோயால் கைகளில் காணப்படும் அறிகுறிகளைக் கண்டறிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த அறிகுறிகளை முன்கூட்டியேக் கண்டறிவதன் மூலம் சரியான சிகிச்சையை வழங்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Almond milk Benefits: சர்க்கரை நோயாளிகள் பாதாம் பால் குடிக்கலாமா? 

Image Source: Freepik

Read Next

Olive Oil Benefits: நீரிழிவு நோயாளிகளுக்கு ஆலிவ் எண்ணெய் இவ்வளவு சிறந்ததா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content