$
Benefits Of Olive Oil For Diabetes: இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் அமைகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் படி, “உடலில் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான ஆற்றலின் முக்கிய ஆதாரம் குளுக்கோஸ் ஆகும். இது உடல் உற்பத்தி செய்யலாம். ஆனால், உண்ணும் உணவில் இருந்தும் குளுக்கோஸ் பெறப்படுகிறது. இன்சுலின் ஆனது கணையத்தால் தயாரிக்கப்படும் ஹார்மோன் ஆகும். இதுவே செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவுகிறது. இந்த இன்சுலின் சரியாக செயல்படாத போது அல்லது உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
மேலும், இந்த சூழ்நிலையில், குளுக்கோஸ் இரத்தத்தின் குவிந்து செல்களை அடைய முடியாமல், உடல் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறது. இது உடலில் முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றைப் பாதிக்கிறது”. இந்த நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள்வது அவசியம் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நீரிழவு நோயை நிர்வகிக்க முடியுமா என்பது குறித்து டயட் என் க்யூரின் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா காந்தி அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Green Juice: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான பச்சைச் சாறுகள்
நீரிழிவு நோயின் ஆலிவ் எண்ணெய் நன்மைகள்
பொதுவாக ஆலிவ் எண்ணெயின் பல்வேறு வகைகள் உள்ளன. அதன் படி தூய ஆலிவ் எண்ணெய், Extra Virgin Olive Oil, சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய், Virgin Olive Oil போன்றவை அடங்கும். நீரிழிவு நோயில் Extra Virgin Olive எண்ணெய் உட்கொள்ளப்படுகிறது. இது மற்ற வகை கொழுப்பைக் காட்டிலும், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க இது உதவியாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தருகிறது.

குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த வழியாகும். இது தவிர, ஆலிவ் எண்ணெயில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாக விளங்குகிறது. அதிக சர்க்கரையின் காரணமாக ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கலாம். அதே சமயம், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதன் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயினால் உடலில் பல நேரங்களில் வீக்கம் ஏற்படலாம். இதனைக் குறைக்கவும், செல்கள் சேதமடைவதைத் தடுக்கவும் ஆலிவ் எண்ணெயில் உள்ள பண்புகள் உதவுகின்றன.
ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்
ஆலிவ் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. 1 தேக்கரண்டி அளவிலான ஆலிவ் எண்ணெயில் 14 கிராம் அளவு மொத்த கொழுப்பு நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து சர்க்கரை போன்றவையும் இல்லை. இது வைட்டமின் மற்றும் கே போன்றவற்றின் நல்ல மூலமாகும். இந்த ஆலிவ் எண்ணெயில் பைட்டோஸ்டெரால் உள்ளது. இது கொலஸ்ட்ரால் போன்ற ஒரு வகையான தாவரப் பொருள் ஆகும். இது இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Symptoms: பெண்களே இந்த அறிகுறிகளை கவனிப்பது அவசியம்.. நீரிழிவு நோய் எச்சரிக்கை!
ஏனெனில் இது கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதைத் தடுப்பதுடன், இதய நோய் தொடர்பான கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. அதே சமயம் ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்வது என்பதும் முக்கியமாகும். ஆலிவ் எண்ணெயை ஒரு நாளைக்கு 3 முதல் 4 தேக்கரண்டி அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆலிவ் எண்ணெய் தரும் மற்ற நன்மைகள்
- உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
- வீக்கத்தைக் குறைக்கிறது
- இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்கிறது
- இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
- அல்சைமர் அபாயத்தை குறைக்க உதவுகிறது
- உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது
இவை அனைத்தும் ஆலிவ் ஆயில் தரும் உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த நன்மைகள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Hyperglycemia Symptoms: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்
Image Source: Freepik