இனிப்பு இயல்பாகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே, கடந்த சில ஆண்டுகளாக ஆர்ட்டிஃபிஷியல் சுகரை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) செயற்கை இனிப்புகளின் பயன்பாடு தொடர்பாக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது.
அதாவது, ஆர்ட்டிஃபிஷியல் சுகரை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்கும் என WHO (Ref) தெரிவித்துள்ளது. உடல் எடையை குறைக்க நீங்களும் செயற்கை இனிப்பை பயன்படுத்துபவராக இருந்தால், கவனம் தேவை. செயற்கை இனிப்பு ஒரு ஜீரோ கலோரி தயாரிப்பு என்று சந்தையில் விளம்பரப்படுத்தப்படுகிறது. அதனால்தான் மக்கள் அதை வாங்குவதை கண்மூடித்தனமாக தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதில் பெரும்பாலும் இந்த செயற்கை இனிப்பை உட்கொண்டு வருகின்றனர்.
முக்கிய கட்டுரைகள்

இவை உடல் நலத்திற்கு நல்லது அல்ல என WHO தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்ல, இது "வெள்ளை விஷம்" எனவும் கூறியுள்ளது. இதில் கலோரி குறைவாக இருந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமா எடுத்துக்கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. ஆர்ட்டிஃபிஷியல் சுகர் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : சில அறிகுறிகள் உங்கள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என எச்சரிக்கிறது தெரியுமா?
டைப் 2 நீரிழிவு ஆபத்து

உடல் எடையை குறைப்பதற்காக ஆர்ட்டிஃபிஷியல் சுகரை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், அது உங்களுக்கு சரியான பலனை கொடுக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றின் அதிகப்படியான பயன்பாடு டைப் 2 நீரிழிவு, இதய நோய் அல்லது பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
வயிற்று பிரச்சினைகள்
ஆர்ட்டிஃபிஷியல் சுகரில் கலோரிகள் இல்லை. நீங்கள் செயற்கை இனிப்பை தவறான வழியில் பயன்படுத்தினாலோ அல்லது தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலோ, செரிமான அமைப்பின் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது குடல் பிரட்டல் போன்றவை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?
தலைவலி

செயற்கை இனிப்புகளும் சில நேரங்களில் தலைவலியை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இதில் சேர்க்கப்படும் அஸ்பார்டேம் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும். நீங்கள் ஏற்கனவே ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிக தலைவலியை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிறுநீரக பிரச்சினை
சில நேரங்களில் செயற்கை இனிப்புகள் உங்கள் சிறுநீரகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது, அதில் உள்ள ரசாயனங்களால் சிறுநீரகத்தின் செயல்பாடு கடினமாகும். உடலில் உள்ள கழிவுகளை வடிகட்டும்போது, சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, சிறுநீரகம் பாதிப்படையும்.
மயக்கம்
செயற்கை இனிப்புகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது தலைச்சுற்றலை ஏற்படுத்தும். சிலர் அதை தவறான வழியில் உட்கொள்ளும்போது, அவர்கள் நரம்புத் தளர்ச்சி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இந்த பதிவும் உதவலாம் : டைப்-2 நீரிழிவு மூளையின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
புற்றுநோய் அபாயம்

செயற்கை இனிப்புகளை உட்கொள்வது புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும். இதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், இது குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவு இவற்றை உட்கொள்வது நல்லது என கூறப்படுகிறது.