Black Sesame Seeds Benefits For Diabetes: அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதனால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான நோய்களும் சிறு வயது முதலே அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு எள்ளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் நீரிழிவு நோயாளிகள் கருப்பு எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Foods in Winter: குளிர்காலத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க.
நீரிழிவு நோயில் கருப்பு எள் சாப்பிடுவதன் நன்மைகள்
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் கருப்பு எள்ளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
- கருப்பு எள்ளில் பல வகையான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்தில் நல்ல விளைவைக் கொண்டிருக்கிறது.
- நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த சூழ்நிலையில் கருப்பு எள் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். கருப்பு எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- இதில் உள்ள அமினோ அமிலங்கள், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்திற்குத் தருகிறது.
- கருப்பு எள்ளில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பல்வேறு வகையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது.
- கருப்பு எள்ளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சர்க்கரையை உறிஞ்சுவது மெதுவாக்குகிறது. கருப்பு எள்ளை உட்கொள்வது சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
- இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு உதவுகிறது. இதன் நுகர்வு எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருப்பு எள் சாப்பிடுவது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கருப்பு எள்ளை எப்படி சாப்பிடலாம்?
- கருப்பு எள்ளை வறுத்து அதை உங்களுக்குப் பிடித்த சாலட்டில் தூவி சாப்பிடலாம்.
- வால்நட்ஸ் உடன் கருப்பு எள்ளைக் கலந்து சட்னியும் தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் சுவையானதாகும்.
- கருப்பு எள்ளைத் தயிருடன் கலந்து சாப்பிடலாம். ஆனால் குளிர்காலத்தில் பகலில் மட்டுமே தயிர் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு எள் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், அதை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Breakfast: உங்களுக்கு சுகர் இருக்கா? காலையில் நீங்க இந்த உணவு தான் சாப்பிடணும்.
Image Source: Freepik