Fri Sep 11, 2026 | 11:24 PM IST

Tea For Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இந்த டீயை குடியுங்க!

What is the best herbal for diabetics: சர்க்கரை நோய் என்பது இன்றைய காலத்தில் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இது முதியவர்களை மட்டும் அல்ல, இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது. ஆனால், மருந்து, சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மூலம் கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, சில வீட்டு வைத்தியங்களும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய வீட்டு வைத்தியம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் ஒரு தேநீர் பற்றி உங்களுக்கு கூறுகிறோம். இது சமையலறையில் இருக்கும் சில மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதை பற்றி பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Morning Drinks For Diabetics: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு குறைய காலையில் இந்த ஜூஸ் குடிங்க

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மூலிகை டீ

  • இந்த டீ நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கருப்பு மிளகு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை கலந்து தயாரிக்கப்படுகிறது.
  • கருப்பு மிளகு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
  • மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுக்கிறது.
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும் பைப்பரின் இதில் உள்ளது.
  • இலவங்கப்பட்டை இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது மற்றும் சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை கடுமையாக உயருவதைத் தடுக்கிறது.
  • கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கும், அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Leg Pain During Diabetes: நீரிழிவு கால்வலிக்கான காரணங்களும், சிகிச்சை முறைகளும்!

மூலிகை டீ தயாரிப்பது எப்படி?

  • இதற்கு முதலில், கருப்பு மிளகை பொடி செய்து 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.
  • இதையடுத்து 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டையை அரை டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயப் பொடியை கலக்க வேண்டும்.
  • அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இந்த பொடிகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
  • இதை வெறும் வயிற்றில் அல்லது இரவு உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்ளலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Diabetes Immunity Tips: சர்க்கரை நோயாளிகள் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இதெல்லாம் ஃபாலோப் பண்ணுங்க.

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content