Diabetes Symptoms At Night: இன்றைய மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை, மன உளைச்சல், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கணையம் உடலில் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது, சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

ஆனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது சில அறிகுறிகள் இரவில் தோன்றும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இரவு நேரத்தில் சர்க்கரை நோயை உணர்த்தும் அறிகுறிகள் குறித்து இங்கே காண்போம்.
அதிக சிறுநீர் கழித்தல்
இரவில் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இந்த அறிகுறி நீரிழிவு நோயின் அறிகுறியாகும். உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, அதிகப்படியான சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. தூக்கத்தையும் கெடுக்கும். உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் வரலாம்.
அதிக தாகம்
இரவில் அதிக தண்ணீர் குடிக்கிறீர்களா? இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது இந்த நிலை ஏற்படும். உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை போக்க அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தாகம் அதிகமாக இருக்கும். இந்த அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
இதையும் படிங்க: சில அறிகுறிகள் உங்கள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என எச்சரிக்கிறது தெரியுமா?
உடல் சோர்வு
இரவில் இந்த அறிகுறியை நீங்கள் அனுபவித்தால், நீங்கள் சந்தேகிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இதுவும் சர்க்கரை நோயின் அறிகுறியே. உயர் இரத்த சர்க்கரை அளவுகள் குளுக்கோஸை திறமையாக பயன்படுத்துவதை செல்களை தடுக்கிறது. இதன் விளைவாக, உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காது. எனவே போதுமான அளவு ஓய்வு எடுத்த பிறகும் நீங்கள் சோர்வாக உணர்ந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல்
தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது இரவில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். இந்த நிலை ஏற்படும் போது தூக்கத்தின் போது சுவாசிப்பதும் கடினமாகிவிடும். இரைப்பை அழற்சி உள்ளவர்களிடம் இந்த அறிகுறி அதிகம் காணப்படுகிறது. எனவே இரவில் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அதிக வியர்வை
பொதுவாக பகலில் கடினமாக உழைக்கும்போது, அதிகமாக வியர்க்கும். ஆனால் மற்றபடி இரவில் வியர்வை அதிகமாக இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இதுவும் சர்க்கரை நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகும். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்கள் உடல் வெப்பநிலையை பாதிக்கிறது. இது அதிக வியர்வையை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இது தவிர இரவில் பாதங்களில் எரிச்சல் இருந்தால், இது சர்க்கரை நோயின் எச்சரிக்கை அறிகுறி என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இரவில் இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல், சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி, சர்க்கரைப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.