$
Are planks good for everyone: ஆரோக்கியமாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும் வைக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு வொர்க்அவுட் செய்யப்படுகிறது. அந்தவகையில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை நம்மில் பலர் அதிகமாக செய்வோம். அப்படி, தொப்பையை குறைக்க உதவும் வொர்க்அவுட்களில் பிளாங்க் மிகவும் பிரபலமானது. இது உடல் மையத்தை வலுப்படுத்த ஒரு நல்ல பயிற்சியாக கருதப்படுகிறது.
பிளாங் செய்வது உடல் சமநிலை, தோரணை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. அதைச் சரியாகச் செய்தால் மட்டுமே சரியான பலனை பெற முடியும். பிளாங் தவறாக செய்யப்பட்டால், காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, தவறான முறையில் பிளாங் செய்வது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Running Daily Benefits: வெறும் 10 நிமிஷம் தினமும் ஓடுனா, இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்
அதே போல, பிளாங் அனைவர்க்கும் பொருந்தக்கூடிய உடற்பயிற்சி அல்ல. சில உடல் நல பிரச்சினைகள் உள்ளவர்கள் பிளாங் செய்தால், தசைகள் மற்றும் எலும்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பிளாங் செய்வதை எப்போது தவிர்க்க வேண்டும், யாரெல்லாம் பிளாங் செய்யக்கூடாது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கீழ்முதுகு வலி

கீழ் முதுகு வலி இருப்பதாக யாராவது புகார் செய்தால், அவர்கள் பிளாங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் பிளாங் பயிற்சி செய்யும் போது, அது கீழ் முதுகில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பிளாங் சரியாக செய்யப்படாவிட்டால். எனவே, உங்களுக்கு கீழ் முதுகுவலி இருந்தால் அதைப் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்த பதிவும் உதவலாம் : ஜிம்மிற்கு செல்லும் முன் மறந்தும் இதை சாப்பிடாதீர்கள்.!
தோள்பட்டை காயம்
உங்களுக்கு ஏதேனும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டால், பிளாங்க் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் பிளாங் பயிற்சி செய்யும் போது, உங்களுக்கு தோள்பட்டை ஆதரவு தேவை. இதனால்தான் யாருக்காவது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டால், பிளாங் செய்வது சற்று கடினமாக இருக்கும். இதை மீறியும் நீங்கள் பிளாங் செய்தால் உங்கள் தோள்பட்டை வலி மோசமாகும்.
மணிக்கட்டில் வலி இருந்தால்

பிளாங் செய்யும் போது, உங்கள் முழு உடலின் எடை கைகளில் தாங்கப்படுகிறது. எனவே, இது மணிக்கட்டில் வலி அல்லது அசௌகரியத்தை அதிகரிக்கும். ஒருவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டாலோ அல்லது வலி இருப்பதாக புகார் தெரிவித்தாலோ, சிறிது நாட்களுக்கு பிளாங் செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பிளாங் செய்ய விரும்பினால், அதை மாற்றியமைத்த பின்னரே அதைச் செய்யுங்கள், எப்போதும் உடற்பயிற்சி நிபுணரின் மேற்பார்வையில் செய்யுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : உடற்பயிற்சி செய்வதை திடீரென நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?
உயர் இரத்த அழுத்தம் இருந்தால்
நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவராக இருந்தால் அதிக நேரம் பிளாங்க் செய்வது நல்லதல்ல. பிளாங் செய்வது உங்கள் இரத்த அழுத்தத்தை சிறிது நேரத்தில் அதிகரிக்கும். எனவே, உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், நீங்கள் பிளாங் செய்யக்கூடாது அல்லது அதைச் செய்யும்போது அதை அதிக நேரம் வைத்திருக்கக்கூடாது.
மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் பிளாங் செய்வதை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைமுறைக்கும் நல்லது. இதற்கு பதில் லேசான உடற்பயிற்சிகளை நீங்கள் செய்வது நல்லது.
Pic Courtesy: Freepik